சமீபத்தில் நடந்து முடிந்த ICC உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வென்றிருந்தது. இந்த தோல்வி இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை மட்டுமின்றி, ஒட்டு மொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் துயரில் ஆழ்த்தியது. இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் ஒரு ஆட்டத்தில் கூட தோல்வி பெறாமல், பத்து போட்டிகளிலும் வெற்றி கண்ட இந்திய அணி இறுதியாக ஆஸ்திரேலியா உடனான போட்டியில் தோல்வியைத் தழுவியது.
இப்போது வரை இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் ரசிகர்கள் புலம்பி வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்ஷெல் மார்ஷ், உலகக்கோப்பை மீது கால் வைத்து அமர்ந்திருந்தவாறு இருக்கும் போட்டோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. உலகக்கோப்பையின் மதிப்பு தெரியாமல் அதன் மீது கால் வைத்து அவமதித்துள்ளார் என்று பலரும் கொந்தளித்து வந்தனர்.
இந்த உலகக்கோப்பையை இந்தியா வென்றிருந்தால், எப்படியெல்லாம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி இருப்போம் தெரியுமா என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சரமாரியாக கருத்துகளை தெரிவித்து வந்தனர். இப்படி கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் சோஷியல் மீடியாவில் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்ற நிலையில்,
உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த பண்டிட் கேசவ் என்ற நபர் உலகக் கோப்பை மீது கால் வைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதை புண்படுத்தியதாக மிட்ஷெல் மீது புகார் கொடுத்துள்ளார். இவரது புகாரை ஏற்றுக் கொண்டு கிரிக்கெட் வீரர் மிட்ஷெல் மார்ஷ் மீது FIR ஐ பதிவு செய்துள்ளனர். இதோடு நிறுத்திக் கொள்ளாத அந்த நபர், புகாரின் பிரதியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்.
மேலும், அந்த மனுவில், உலகக்கோப்பையை அவமதித்த ஆஸ்திரேலிய வீரரை இனி இந்தியாவில் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். இவ்வாறு உலகக் கோப்பை மீது கால் வைத்ததற்கு பலர் கடுமையாக விமர்சித்து வந்தாலும், இன்னும் சிலர் அது சாதாரண வெற்றிக் கோப்பை மட்டுமே என தெரிவித்து வந்தாலும்.
இருப்பினும், பெரும்பாலானோர் என்னதான் விளையாட்டாக இருந்தாலும் உலகக்கோப்பைக்கான மாரியாதை வேண்டாமா என்று விவாதித்து வருகின்றனர். இவ்வாறு இந்திய ரசிகர்கள் சரமாரியாக விமர்சித்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது சமி அவரது கருத்தை வெளியிட்டுள்ளார். உலகக் கோப்பை மீது மிட்செல் மார்ஷ் கால் வைத்திருப்பது தன் மனத்தைக் காயப்படுத்தியதாகவும், உலகில் உள்ள அனைத்து அணிகளும் வெல்ல போராடும் கோப்பை, உங்கள் தலைக்கு மேல் நீங்கள் தூக்க விரும்பும் கோப்பை மீது கால் வைத்திருப்பது எனக்கு வருத்தம் அளிப்பதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், கிரிக்கெட் வீரர்கள் இது போன்ற செயலை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.உலகக் கோப்பை டிராபி மீது கால் வைத்து போஸ் கொடுத்த ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷிற்கு எதிராக எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.