செம்ம பார்மில் இருக்கும் நடராஜன்… இருந்தும் இந்தியா அணியில் இடமில்லையாம்… தமிழ்நாட்டில் பிறந்தது குற்றமா.?

0
Follow on Google News

2020 டிசம்பர் 02-ம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானா தமிழகத்தை சேர்ந்த நடராஜன், அதற்கடுத்த இரண்டே நாட்களில் டி20 போட்டிகளிலும், ஒரே மாதத்தில் இந்தியாவின் டெஸ்ட் அணியிலும் இடம்பெற்றார். ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஒரே தொடரில் மூன்று ஃபார்மெட்டில் காலடி எடுத்து வைத்த நடராஜன் ஆட்டம் மிக பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்திய அளவில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் பல்வேறு நட்சத்திர வீரர்களின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக அவரது யார்ககர்கள் பெரிதும் பேசப்பட்டன. ஆஸ்திரேலியாவின் கோட்டை என அழைக்கப்பட்ட பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் இந்திய அணி போட்டியை வென்றது. 30 ஆண்டுகளுக்கு பிறகு கப்பாவில் தோற்றது ஆஸ்திரேலியா. அந்த டெஸ்ட் போட்டியில் விளையாடிய நடராஜன், முதல் இன்னிங்சில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

அடுத்தடுத்து விறுவிறுவென நடராஜன் கிராஃப் ஏறியது. ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் அவரது பயணம் நான்கே மாதத்தில் தேங்கியது. 2021 மார்ச் 28-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 10 ஓவர்களில் 71 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அந்த போட்டிக்கு பின் இந்திய அணியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் விளையாடவில்லை. இதுவரை நான்கு டி20 போட்டிகள், இரண்டு ஒருநாள் போட்டிகள், ஒரு டெஸ்ட் போட்டி விளையாடி இருக்கிறார்.

சில சொதப்பல் ஆட்டங்கள் மற்றும் காயங்கள் நடராஜனின் கிரிக்கெட் வாழ்வை கேள்விக்குறியாக்கியிருந்த நிலையில், 2023 ஐபிஎல் போட்டியில் மீண்டும் களம் கண்டார் நடராஜன். ஐபிஎல்லில் என்ன தான் சிறப்பாக விளையாடினாலும் இந்திய அணியில் அவர் பங்கு பெறவில்லை. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே ஒருநாள் கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழக வீரர் நடராஜன் அபாரமாக பந்துவீசி பரோடா அணியை 124 ரன்களில் சுருட்டி அசத்தினார்.

பிசிசிஐ நடத்தும் பிரதான ஐம்பது ஓவர் போட்டியாக கருதப்படுவது விஜய் ஹசாரே கோப்பையாகும். தற்போது நடந்த 3 போட்டிகளில் 7 விக்கெட்களை எடுத்துள்ளார். டி20 உலககோப்பை இன்னும் 6 மாதத்தில் வர உள்ள நிலையில், நடராஜன் சிறப்பாக பந்துவீசி வருவது, அவர் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறிது.

ஆனால் தற்போது நடைபெற உள்ள தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டித் தொடருக்கான இந்திய அணியில் அவர் பெயர் அறிவிக்கப்படவில்லை. இது தமிழக ரசிகர்களை வேதனை அடைய செய்திருக்கிறது. மேலும் இடது கை வேக பந்துவீச்சாளர் தேவைப்படும் நிலையில் நடராஜனை பிசிசிஐ ஏன் பயன்படுத்தவில்லை என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் நடராஜன் தமிழ்நாட்டில் பிறக்காமல் வேறு ஒரு மாநிலத்தில் பிறந்திருந்தால் மீண்டும் மீண்டும் இந்தியா அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கும், அந்த வகையில் தமிழ்நாட்டில் பிறந்த ஒரு காரணத்திற்காக நல்ல பார்மில் இருக்கும் நடராஜன் புறக்கணிக்க படுகிறாரா.? என்கிற விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.