ஓவர் தெனாவட்டு காட்டிய இந்திய வீரர்கள்… தோல்விக்கு பின்னணி காரணமே இது தானா.?

0
Follow on Google News

அகமதாபாத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சற்று தடுமாற்றத்துடனே ஆடியது. 100 ரன்களை எட்டுவதற்குள்ளாக 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை கோலி – கே எல் ராகுல் ஜோடி ஒரு கட்டத்தில் காப்பாற்றியது. ஆனாலும் அந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

இந்திய அணி 240 ரன்களில் ஆல் அவுட்டானது. அதனைத் தொடரந்து இந்தியா நிர்ணயித்த 241 ரன் இலக்கை டிராவிஸ் ஹெட் சதத்தின் உதவியுடன் ஆஸ்திரேலிய அணி எளிதாக எட்டியது. 10 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்ற இந்திய அணி, கடைசி போட்டியில் தோல்வியடைந்து உலகக்கோப்பையை பறிகொடுத்த இந்திய வீரர்கள் கலங்கியதை போல் ரசிகர்களும் கலங்கினர்.

ஆஸ்திரேலியா அணி இப்படி ஆட முக்கிய காரணம் ஸ்லிப் இல்லை. தொடக்கத்தில் கோலி கொஞ்ச நேரம் ஸ்லிப் இருந்தார். அதன்பின் ஸ்லிப் இல்லை. பொதுவாக ரைட் ஹேண்ட் பேட்ஸ்மேன் இருந்த போது லெப்ட் ஹேண்ட் ஜடேஜா, குல்தீப் பவுலிங் போட்ட போது ஸ்லிப் இருந்திருக்க வேண்டும். ஆனால் இன்று ரோஹித் சர்மா ஸ்லிப் வைக்கவில்லை. அவரின் இந்த நிலைப்பாடு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏன் ரோஹித் ஸ்லிப் இல்லாமல் ஆடினார் என்பது கேள்விகளை எழுப்பி உள்ளார்.

பவுலிங் ரொட்டேஷனில் ரோஹித் சரியாக பிரஷர் போடவில்லை. 40 ஓவர்களுக்குள் ஆட்டத்தை முடிக்க நினைத்திருக்க வேண்டும். அப்போதே விக்கெட் எடுக்க முயன்று இருக்க வேண்டும். ஆனால் பவுலர்களை ரோஹித் சரியாக பயன்படுத்தாமல் போனது ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக மாறியது. இதனால் எல்லாரும் அவரை வறுத்து எடுத்து வருகின்றனர்.

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான சூரியகுமார் யாதவின் ஆட்டம் பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் பவுண்டரி அடிக்க முயற்சிக்கிறேன் என்ற பெயரில் பின்பக்கம் மட்டுமே அடிக்க முயற்சித்தார். இதனால் 18 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். இதற்கு 360 டிகிரி பிளேயர்னா மைதானம் முழுக்க ஆடணும். அபப்டியே எல்லா பந்தையும் 180 டிகிரிலயே விளையாட கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் குறிப்பாக உலகக்கோப்பை போன்ற முக்கியமான தொடரின் இறுதிப் போட்டியில் சூரியகுமார் யாதவின் செயல்பாடு மூளையற்ற தனமாக இருக்கிறது என்று ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த 2023-ஆம் ஆண்டு முழுவதும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதங்களை விளாசி வந்த சுப்மன் கில் இந்த உலக கோப்பை தொடரிலும் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று நடைபெற்ற முக்கியமான இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்க அவரும் ஒரு காரணம் என ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இப்படி ஒரு அழுத்தமான போட்டியில் இளம் வீரரான சுப்மன் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்தது ஏமாற்றம் அளிப்பதாகவும், அதே இடத்தில் அனுபவ வீரரான ஷிகார் தவான் இருந்திருந்தால் நிச்சயம் அவர் ரோகித்துடன் மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்திருப்பார் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்த நேரத்தில் நான் தல தோனியை மிஸ் பண்றேன் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் பதிவு செய்து வருகிறார்கள். ரோஹித் சர்மா கேப்டன்சி சொதப்பல் தான் மிகப்பெரிய காரணமாக தோல்விக்கு பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய வீரர்கள் அனைவரும் அனைத்து போட்டியும் வென்ற ஆணவத்தில் பிளானிங் இல்லாமல் சென்றதே தோல்விக்கு காரணம் என்றும் பலர் கூறி வருகின்றனர்.