மக்கள் அலட்சியத்தால் மேலும் உச்சத்தை தொடுமா கொரோனா? அச்சத்தில் தமிழக அரசு…

0
Follow on Google News

தமிழகத்தில் கொரோனா அலை மிக விரைவாக பரவி வருகிறது. கொரோனா தொற்று அதிகம் பரவக்கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழக அரசு கொரோனா பரவலைத் தடுக்க மே 14 முதல் மே24 வரை பல கட்டுப்பாடுகள் கொண்ட தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பித்தது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசின் இந்த ஊரடங்கை அலட்சியமாக எடுத்து கொண்டு பொதுமக்கள் வெளியே சுற்றி வந்தனர்.

இதனால் கொரோனா தொற்றின் பரவல் அதிகரிக்க தொடங்கியது. தினம் தோறும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா பாதித்து மருத்துவமனைகளில் படுக்கைகள் இடம் இல்லாமலும் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் பற்றாக் குறையால் தவித்து வந்தனர். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் ஆக்சிசன் தட்டுப்பாட்டால் பலர் உயிரிழப்பை சந்தித்தனர்.

தமிழக அரசு விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளையும் அதிகரித்து, ஆக்சிஜன் தட்டுப்பாட்டையும் சரி செய்தனர். பொது இடங்களில் கிருமி நாசினி மற்றும் தடுப்பூசி, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை பொதுமக்களுக்கு விரைவாக வழங்க செய்தனர். என்னதான் தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும் பொதுமக்கள் இதை சரியாக கடைபிடிக்க வில்லை.

தமிழகத்தில் கொரோனா சங்கிலியை உடைக்க வேண்டும் என்றால் தளர்வு இல்லாத ஊரடங்கை கையில் எடுத்தால் தான் கொரோனா சங்கிலி தொடர்பை உடைக்க முடியும் என்பதால் மேலும் ஒரு வாரம் தளர்வு இல்லாத ஊரடங்கை நேற்று முன்தினம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தளர்வு இல்லாத முழு ஊரடங்கை அமல் படுத்துவதால், ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க முழு ஊரடங்காண ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

இதனால் நேற்று ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சமூக விலகலை மறந்து நீண்ட வரிசையில் காத்திருந்து மளிகைக் கடைகளில், அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்றனர். காய்கறிகள் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டால் அதை வாங்க கூட்டம் தான் அலைமோதியது. ஒரு வாரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு என்பதால் இன்று நடைபெற இருந்த திருமணங்கள் நிகழ்ச்சிகளும் அதற்கு முன்தினமான நேற்று எளிய முறையில் நடைபெற்றது. தொற்றை குறைக்க தளர்வு இல்லாத முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது ஆனால் அந்த ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள் கூட்டத்தை பார்த்தால் தொற்று மேலும் பல மடங்கு அதிகரிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.