எப்படி பாகுபலி படத்தில் மஹேந்திர பாகுபலி என்னும் நான் என்று பிரபாஸ் உச்சரிக்கும் போது மக்கள் மகிழ்ச்சியில் எழுப்பும் கரகோஷம் விண்ணை பிளக்குமோ, அதே போன்று தான் ஒவ்வொரு முறையில் தமிழகம் வரும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்சா ஆகியோர் மேடையில் அண்ணாமலை என்று உச்சரிக்கும் போது, அந்த கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் எழுப்பும் கரகோஷம், மோடி, அமித்சா இருவரையும் புன்னகைக்க வைக்கும்.
அந்த அளவுக்கு அண்ணாமலை என்கிற ஒருவரால் மட்டுமே, தமிழக மக்களை பாஜக பக்கம் இழுங்கும் சக்தி கொண்டவர், அவரால் மட்டுமே பாஜகவை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல முடியும் என முழுமையாக நம்பிய பிரதமர் மோடி, மற்றும் அமித்சா ஆகிய இருவருமே, தமிழக அரசியலை பொறுத்த வரை அண்ணாமலைக்கு முழு சுதந்திரத்தை கொடுத்து, இது உன்னோட களம் , நீ அடித்து ஆடுடா செல்லம் என தொடர்ந்து அண்ணாமலை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் பக்கபலமாக இருந்து வருகின்றனர் மோடி மற்றும் அமித்சா இருவரும்.

இந்த நிலையில் சமீப காலமாகவே தமிழக அரசியல் களம் நிலவரம் குறித்து தவறான தகவலை டெல்லி பாஜகவுக்கு அளித்து வருகிறார்கள், தங்களை வலது சாரி பத்திரிகையாளர்கள் என காட்டி கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு சொம்பு அடிக்கும் ஒரு சிலர், அதாவது டெல்லியில் இருக்கும் ஒரு முக்கிய புள்ளி ஒருவரிடம் இவர்கள் கொடுக்கும் தமிழக அரசியல் நிலவரம் குறித்த தவறான ரிப்போர்ட் டெல்லி தலைமையின் கவனத்துக்கு எடுத்து செல்ல படுகிறது.
அதில் எடப்பாடி பழனிசாமி மிக பெரிய ஆளுமை மிக்க தலைவர் போன்று, அதிமுக தமிழகத்தில் இன்னும் ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று வலுவாக இருப்பது போன்றும், அதே நேரத்தில் தமிழகத்தில் பாஜக ஒன்றுமே இல்லை என்பது போன்ற ஒரு பொய்யான தகவலை டெல்லியில் இருக்கும் முக்கிய புள்ளி ஒருவர் சேகரித்து பாஜக தலைமையின் கவனத்துக்கு எடுத்து சென்றதின் விளைவு , சரி அதிமுகவை யும் கூட்டணியில் கொண்டு வருவதற்கு ஆப்சன் வைத்திருப்போம் என்கிற சிந்தனை டெல்லி பாஜக தலைமைக்கு தோன்றி இருக்கு.
இதனை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்தைக்கான கதவை திறந்து வைத்து இருந்திருக்கிறார். இதனை தொடர்ந்து சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்சாவை சந்தித்து கூட்டணி குறித்து பேசியது, அதன் பின்பு அண்ணாமலை டெல்லி பயணம், அதனை தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் செங்கோட்டையன் டெல்லி பயணம் என தமிழக அரசியல் பரபரப்புக்கு மத்தியில் பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றம் செய்ய இருக்கிறார் என்கிற தகவல் பரவியது.
இதனை தொடர்ந்து தற்பொழுது தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றம் செய்யப்பட இருக்கிறார் என்கிற தகவல் பரவிய பின்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், தமிழக அரசியல் நிலவரம் குறித்து உளவு துறை ரிப்போர்ட் சென்று இருக்கிறது. அதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றம் செய்யப்பட்டால், தற்பொழுது பாஜகவை ஆதரிக்கும் தமிழக மக்களில் சுமார் 70 சதவிகிதம் மக்களின் கோபத்துக்கு பாஜக உள்ளாக நேரிடும்.
மேலும் வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் பானையை யாரும் உடைப்பது போன்று அமைந்து விடும் பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றம் என்பது என அமித்ஷா கவனத்துக்கு சென்ற உளவு துறை ரிப்போர்ட். குறிப்பாக டெல்லி பாஜகவுக்கு வலது சாரி பத்திரிகையாளர் என்கிற போர்வையில் தமிழக அரசியல் குறித்து ரிப்போர்ட் கொடுக்கும் அனைவரும், எடப்பாடி ஆதரவாளர்கள் என்றும், அவர்கள் பாஜகவுக்கு எதிராகவும், எடப்பாடிக்கு ஆதரவாக ஒரு நேரடிவ் செட் செய்யும் வேலையை தான் செய்து வருகிறார்கள்.
வரும் 2026 சட்டசபை தேர்தலில் பாஜக அண்ணாமலை தலைமையில்தேர்தலில் சந்திக்க வில்லை என்றால் பலத்த அடி வாங்கும் என்கிற உளவு துறை மூலம் தமிழக அரசியல் நிலவரங்களை தெரிந்து கொண்ட அமித்ஷா, தமிழக பாஜக தலைவர் மாற்றம் தற்பொழுது இல்லை, அண்ணாமலை தலைமையில் தான் வரும் 2026 சட்டசபை தேர்தலை பாஜக சந்திக்கும் என டெல்லி பாஜக தலைமையை அறிவுத்தியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் விரைவில் பாஜக தலைவராக அண்ணாமலை தொடர்வார் என்கிற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.