நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும்…. இல்லையேல்.? PTR ஆணவ பேச்சுக்கு நடிகை கஸ்துரி பதிலடி..

0

தமிழக நிதி அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. பெண் பத்திரிகையாளர் ஒரு திமுக தேர்தல் வாக்குறுதிகளில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என தெரிவித்திருந்தது பற்றி கேள்வி எழுப்பிய போது, எப்போது என்று தேதி குறிப்பிட்டு சொன்னார்களா.? என பெண் பத்திரிகையாளர் கேள்விக்கு எரிச்சலுடன் பதிலளித்தார்.

அப்போது மற்றொரு ஆண் பத்திரிகையாளர் அந்த பெண் பத்திரிகையாளருக்கு உதவும் நோக்கில் கேள்வியை விளக்கி சொல்ல முயன்றார், அதற்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், யாராவது ஒருவர் கேள்வி கேளுங்க, ஏன் அவருக்கு அறிவு பத்தவில்லை என்று நீங்கள் கேள்வி கேட்கிறீர்களா.? என கோபத்துடன் தமிழக நிதியமைச்சர் நடந்து கொண்டார். தொடர்ந்து பத்திரிகையாளர் கேட்ட அடுத்தடுத்து கேட்ட கேள்விகளுக்கு உங்களுக்கு கணக்கு தெரியுமா.? தெரியாத .? என எரிச்சலுடனே பதிலளித்தார்.

இதனை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பின் போது பழனிவேல் தியாகராஜன் நடந்து கொண்ட விதம், பல்வேறு விமர்சனகள் எழுந்துள்ள நிலையில். நடிகை கஸ்துரி இது குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெயர் குறிப்பிடாமல் தனது சமூக வலைதளப்பாக்கத்தில் கருத்தை தெரிவித்துள்ளார் அதில், ஏய், யார்லே அது தேர்தல் வாக்குறுதியெல்லாம் குத்தி காட்டுறது? அதெல்லாம் இப்போ எதுவும் பண்ணமுடியாது. வேணும்னா அடுத்த தேர்தல் டைம்ல பாக்கலாம்.

அல்லாத்துக்கும் மத்திய அரசை குறை சொல்லுறோம்னு பழி வரக்கூடாதுன்னுட்டுதான் ஒன்றிய அரசுன்னு மாத்தி கூப்புடுறோம். அதை பாராட்ட கூடாதா? மோடியை பாத்து நேர்லயே சொல்லிட்டமே! ஏய் ஒன்றிய அரசே… அது … வந்து… ஒன்றிணைவோம் வா . ஹிஹி . என நகைச்சுவை கலந்து கஸ்துரி பதிவு செய்துள்ளார். மேலும் அடுத்த பதிவில் யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.என்றும்.

கலைஞர் உரை : ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும். வள்ளுவனை தெரியாவிடினும் கலைஞரை இவ்வளவு சீக்கிரம் திமுகவினர் மறத்தலாகாது. முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எளிமையாக உள்ளார். தன்னடக்கத்தை கடைபிடிக்கிறார். அனைவரையும் மதித்து அன்புடன் பண்புடன் பழகுகிறார். பத்திரிக்கையாளர்களுக்கு பல கௌரவங்களை அளித்து வருகிறார்.

அவரை கட்சியினர் அனைவரும் பின்பற்றினால் நலம். பதவிக்கு அழகு பொறுப்பு, பொறுமை , பண்பு. கேள்வி கேட்டால் ஆத்திரமாக சொற்களை வீசுவதாலும் மரியாதைக்குறைவாக பதிலளிப்பதாலும் யாருக்கு என்ன லாபம்? என அமெரிக்காவில் பல பட்டபடிப்பு படித்து, பல பெரிய நிறுவனங்களில் பெரிய பொறுப்பில் இருந்ததாக அடிக்கடி தற்பெருமை பேசிவரும் நிதி அமைச்சர் பழனிவேல் தியகராஜன் பெயரை குறிப்பிடாமல் நடிகை கஸ்தூரி அறிவுரை வழங்கியுள்ளார்.