மதம் மாற்றம் இருக்கும் வரை.! மதங்களுக்குள் போட்டி இருக்க தான் செய்யும்.! ஆடிட்டர் குருமூர்த்தி …

0
Follow on Google News

தனியார் தொலைக்காட்சியில் நடந்த நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, நெறியாளர் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார், அதில் தமிழக பாஜக சார்பில் நடைபெறும் வேல் யாத்திரை குறித்து இந்து மதத்தை வீட்டில் வைப்பது நல்லதா.? அல்லது ரோட்டில் வைப்பது நல்லதா.? என நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி.

எந்த மதமும் தெருவுக்கு வருவது சரியில்லை, ஆனால் ஒரு குறிப்பிட்ட மதம் ,மட்டும் வரக்கூடாது என்று கூறுவதும் நல்லதல்ல, அரசியலில் போட்டி இருப்பது போன்று மாதங்களுக்குள் போட்டி இருக்கும், ஏனென்றால் மதமாற்றம் இருக்கும் வரை மதங்களுக்குள் போட்டி இருக்கும் என தெரிவித்த ஆடிட்டர் குருமூர்த்தி, இந்த வேல் யாத்திரையில் இடுபடக்கூடியவர்கள் இந்து மதத்தை காக்க வேண்டும், அப்படி செய்தால் தான் பக்திக்கே உபயம் என்பதற்காக செயல்படும் ஒரு கூட்டம்.

இந்து மதம் காக்க படவில்லை என்றால் வீட்டுக்குள் இருக்கும் அந்த பக்தியும் மறைந்து விடும், மதம் என்பது அனைவரும் ஒன்றுபட்டு பொதுப்படையாக செயல்பட வேண்டும் என கற்பித்ததே வெளிநாட்டில் இருந்து வந்த மதங்கள் தான் என குறிப்பிட்ட ஆடிட்டர் குருமூர்த்தி.அது வரை மதங்கள் வீட்டில் தான் இருந்தது,தெருவில் கூட்டம் போட்டு மதம் மாற்றத்தில் வெளிநாட்டு மதங்கள் செய்ததால் தான் நம்மூர் மதங்களும் வீதிக்கு வந்தது.

ஆகையால் அணைத்து மதங்களுக்கும் ஒரு இணக்கம் வர வேண்டுமானால் மத மாற்றம் நிறுத்த படவேண்டும், மத பிரச்சாரம் நிறுத்த படவேண்டும், அணைத்து மதங்களும் அவரவர் வீட்டில் இருக்க வேண்டும், அணைத்து மதங்களும் அவரவர்வழிபாட்டு தளங்களான மசூதி,சர்ச், மற்றும் கோவிலில் இருக்க வேண்டும், அந்த நிலைமை அனைவருக்கும் பொதுவாக வரும் போது தான் இந்துக்களையும் அப்படி இருக்க செய்ய முடியும் என துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்தார்.