அண்ணாமலைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த திருச்சி சூர்யா… இதுவரை யாரும் செய்திடாத இனிப்பான சம்பவம்..

0
Follow on Google News

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுகவின் கொள்கை பரப்பு செயலாளருமான திருச்சி சிவா மகன் திருச்சி சூர்யா கடந்த 2022ம் ஆண்டு பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைந்து கொண்டார், பாஜகவில் இணைந்து கொண்ட மிக குறுகிய காலத்தில், இத்தனை நாட்களாக எங்கய்யா இருந்த ராசா, திராவிட அரசியலில் எதிர்க்க உன்னை மாதிரி ஆட்கள் தான் பாஜகவுக்கு தேவை என பாஜகவினர் கொண்டாட தொடங்கினார்கள்.

திருச்சி சூர்யா திமுக பாரம்பரியத்தில் இருந்து வந்திருந்தாலும் கூட,குறிப்பாக தன்னுடைய தந்தை திருச்சி சிவா தொடர்ந்து திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர், மேலும் திமுகவின் சித்தாந்த அரசியல்வாதி, என திருச்சி சூர்யா திமுக சித்தாந்தம் குடும்பத்தில் இருந்து வந்தாலும் கூட, பாஜகவில் இணைந்த பின்பு, தான் ஏற்று கொண்ட கட்சிக்கும் அதன் தலைமைக்கு இதற்கு மேல் ஒருவர் விசுவாசமாக இருக்க முடியுமா.? என பாஜகவினரே ஆச்சரிய படும் விதத்தில் திமுகவையும், அதன் தலைமையையும் மிக கடுமையாக எதிர்த்து அரசியல் செய்து வருகின்றவர் திருச்சி சூர்யா.

திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக தலைமை என அவர்களின் மொத்த வரலாறையும் தன்னுடைய நுனி விரலில் வைத்திருக்கும் திருச்சி சூர்யா திமுகவுக்கு எதிராக செய்யும் அரசியலை எதிர் கொள்ள முடியாமல் திணறியது திமுக என்றே சொல்லும் வகையில் இருந்தது திருச்சி சூர்யாவின் அதிரடி அரசியல். பாஜக தலைவர் அண்ணாமலையை தலைவராக ஏற்று கொண்ட திருச்சி சூர்யா, தன்னுடைய தலைவர் குறித்து யார் விமர்சனம் செய்தாலும், முதல் நபராக தக்க பதிலடி கொடுத்து எதிர் தரப்பில் அடுத்து வாயே திறக்காதபடி செய்து விடுவார் திருச்சி சூர்யா.

குறிப்பாக திருச்சியில் அதிமுக என்கிற கட்சியை சல்லடை போட்டு தேடினாலும் கண்டு பிடிக்க முடியாதபடி, திருச்சியில் அட்ரஸ் இல்லாமல் அதிமுக போய்விட்டதால், திமுகவை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய இடத்தில் பாஜக உள்ளது, அந்த வகையில் திமுகவின் ஆளுமை மிக்க அமைச்சர்களான அமைச்சர் கே,.நேரு, மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய இருவரையும் மிக கடுமையாக எதிர்த்து திருச்சியில் கள அரசியல் செய்து வரும் திருச்சி சூர்யாவும் அரசியல் ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டது.

இடையில் சில சில மாதங்கள் அரசியல் காரணங்களுக்காக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவு வரும் வரை பாஜகவில் இருந்து சற்று விலகி இருந்த திருச்சி சூர்யா, கடந்த நவம்பர் மாதம் சூர்யா தான் வகித்துவந்த பதவியில் மீண்டும் தொடருமாறு அறிவுறுத்தப்படுகிறார் என பாஜக தலைவர் அண்ணாமலையிடம் இருந்து வந்த உத்தரவின் பேரில் மீண்டும் தனனுடைய அதிரடி அரசியலை தொடங்கினார்.

திருச்சி சூர்யாவின் அதிரடி அரசியல் குறித்து சில விமர்சனங்கள் இருந்தாலும் கூட, திராவிட காட்சிகளில் அவர்கள் பாசையில் இது போன்று அதிரடியாக எதிர்த்தால் தான் பாஜக அசுர வளர்ச்சியை பெரும் என்பது தமிழக அரசியல் எதார்த்தம், இந்நிலையில் அதிரடி அரசியலுக்கு பெயர் போன திருச்சி சூர்யா, திராவிட அரசியலை பின்பற்றி தன்னுடைய மாவட்டத்துக்குள் மட்டும் அரசியல் செய்து பிற மாவட்ட அரசியலில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க மாட்டார்.

பொதுவாகவே திராவிட கட்சி போன்று அவரவர் மாவட்டத்துக்குள் பாஜகவினர் அரசியல் செய்தாலே அவர்களின் செல்வாக்கும் அந்த மாவட்டத்தில் அதிகரிக்கும், கட்சியும் அவர்கள் சார்ந்த மாவட்டத்தில் வளரும், அந்த வகையில் இன்று பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருக்க கூடிய நயினார் நாகேந்திரன் எப்படி தான் சார்ந்த மாவட்டத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்கு பாஜகவில் இருக்கும் பலருக்கு முன்னுதாரணமாக உள்ளார்.

இந்நிலையில் தற்பொழுது தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில், கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வித்தியசமான முறையில், சுமார் 25 கிலோ எடை கொண்ட சாக்லேட் மாலையை அனுவித்து இனிப்பான தலைவர்கள் இனிப்பான சம்பவம் செய்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் அதிரடி அரசியலுக்கு பெயர் போன திருச்சி சூர்யா.