ஓன்று வாங்கினால் ஓன்று இலவசம் போன்று திமுகவில் மூன்று முதல்வர்கள்.! தமிழக பாஜக தலைவர் அதிரடி..

0
Follow on Google News

பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் அவர்களின் தந்தை ராமசாமி ரெட்டியார் சமீபத்தில் மறைந்ததை தொடர்ந்து, பேராசிரியரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க மதுரை வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. மதுரை அத்திகுளத்தில் பேராசிரியர் மற்றும் அவர்களின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதன் பின் மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர்.

பிரதமர் மோடியின் நலத்திட்டங்ளால் தமிழகத்தில் மூன்றரை கோடி பேர் பலன் பெற்றுள்ளனர். இதன் காரணமாக பாஜகவிற்கு தேர்தலில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். பெகாசஸ் மூலமாக அரசியல் தலைவர்கள், ஒட்டுகேட்பு என்ற புகார் மீது மத்திய அமைச்சர்கள் பதில் அளித்துள்ளனர். வாட்ஸ் அப் நிறுவனம் பெகாசஸ் மூலமாக, கிராக் பண்ண முடியாது என உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. தனிமனித கருத்துரிமைக்கு மதிப்பளிக்கும் பாஜக யாருடைய பேச்சையும் ஒட்டு கேட்காது.

ஒட்டு கேட்கும் விவகாரம் யூகத்தின் அடிப்படையிலான குற்றச்சாட்டு. பெகாசஸ் ஸ்பைவேரிடம் நம்பர் இருப்பதால் ஒட்டு கேட்கப்பட்டது என்பது உண்மையல்ல. அரசியல் காரணங்களுக்காக ஒரு குறிப்பிட்ட ஊடகம் வெளியிட்ட செய்திதான் ஒட்டு கேட்பு விவகாரம். தனிமனித சுதந்திரத்தை பாதுகாக்கும் கட்சி பாஜக. ஒட்டுகேட்பு புகார் என்பது பொய் செய்தி. திமுகவிற்கு பாஜகதான் எதிரி என்ற அடிப்படையில் தமிழக அரசியல் களம் நகர்கின்றது. .

சித்தாந்த அடிப்படையிலான கட்சி தான் பாஜக. நாங்கள் திராவிடமா.? பாஜகவா என பேச விரும்பவில்லை. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல திமுகவில் தற்போது மூன்று முதல்வர்கள் உள்ளனர். ஓன்று மக்கள் வாக்களித்த முதல்வர், மற்றொரு முதல்வர் அவருடைய மகன், மேலும் ஒரு முதல்வர் அவருடைய மருமகன். இது தான் சித்தாந்தமா.? ஒரு குடும்பம் கட்டுக்குள் கொண்டு வருவது தான் சித்தாந்தமா.? என கேள்வி எழுப்பிய பாஜக மாநில தலைவர்.

மேலும் நாங்கள் திராவிட சித்தாந்தம் பற்றி பேச விரும்பவில்லை. திமுக சித்தாந்தமா.? பாஜக சித்தாந்தம் ? என்று தான் பேசுகிறோம்.பாஜகவில் சாதாரண தொண்டர்களுக்கு கூட மிக பெரிய அங்கீகாரம் இருக்கு. பாஜகவில் தலைவர்களை பலி கொடுத்து தொடர்களை வைத்து கட்சி நடத்துகிறோம். சில காட்சிகள் தொண்டர்களை பலிகொடுத்து தலைவர்களை வைத்து கட்சி நடத்துகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.