கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கொள்கைகளை மாற்றினால் பாஜகவுடன் சங்பரிவார் அமைப்புகளோடும் விடுதலை சிறுத்தை கட்சி கைகோர்பதில் ஒருபோதும் தயங்காது என்று திருமாவளவன் பேசியுள்ளது குறித்த அரசியல் பின்னனி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற விடுதலை சிறுத்தை கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் இரண்டுமே வெற்றி பெற்றனர். ஆனால் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில், முதலில் காங்கிரஸ் கட்சிக்கு பத்து தொகுதிகளை ஒதுக்கியது.
அதன் பின்பு இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மதிமுக உட்பட இதர கட்சிகளுக்கு சீட்டு ஒதுக்கிய பின்பு, விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவனை இறுதிவரை பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்காமல் இழுத்தடிப்பு செய்து வந்தது திமுக தலைமை, இறுதியில் இரண்டு தொகுதிகளை போராடி திமுக தலைமையிடம் பெற்று கூட்டணியில் இடம் பெற்றார் திருமாவளவன்.
இந்நிலையில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிட்டது, மீதம் 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுத்தது. ஆனால் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்தது 30 தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதில் திமுக தலைமை உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை 10 தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் இந்தமுறை ஐந்து தொகுதிகள் மட்டும் தான் திமுக தரப்பிலிருந்து ஒதுக்கப்படும் என்றும். மேலும் மீதமுள்ள ஐந்து தொகுதிகளை பிற கூட்டணி கட்சிகளுக்கு தலா ஒரு சீட் என்கின்ற வகையில் பிரித்துக் கொடுக்க முடிவு செய்துள்ளது. திமுக ஒதுக்கும் தொகுதிகளை பெற்று கொள்வதர்க்கு விருப்பம் இல்லை என்றால், அவர்கள் கூட்டணியில் இருந்து வெளியேறட்டும் அவர்களுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதியில் திமுக போட்டியிடும், அல்லது கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுக்கலாம் என்கிற முடிவில் இருக்கிறது திமுக தலைமை.
இந்நிலையில் கடந்த முறை விடுதலை சிறுத்தை கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால் இம்முறை அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும், ஒரு தொகுதி மட்டும் தான் ஒதுக்கப்படும் என்றும் அல்லது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சீட் இல்லை, அதற்கு பதில் ஒரு ராஜசபா எம்பி மட்டும் விடுதலை சிறுத்தை கட்சிக்கு தருகிறோம் என, இம்முறை சீட் இல்லை என்று கை விரிக்கவும் திமுக தலைமை தயாராக இருக்கிறது.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் திருமாவளவனை கழட்டிவிடப்பட்டால் பாஜகவுடன் கைகோர்ப்பதற்காக தான், பாஜக கொள்கையை மாற்றினால் அவர்களுடன் கைகோர்ப்பதில் எங்களுக்கு தயக்கம் இல்லை என்று திருமாவளவன் பேசியதாகவும், மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கடந்த முறை போன்று இரண்டு தொகுதிகள் விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒதுக்கவில்லை என்றால் திமுகவுக்கு எதிராக பாஜகவுடன் கைகோர்க்க தயாராக இருக்கின்றோம் என திமுக தலைமைக்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் தான் திருமாவளவன் இது போன்ற பேசியதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.