கடந்த அக்டோபர் 2ம் தேதி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆர்.எஸ். எஸ் அணிவகுப்பு நடத்த திட்டமிட்டப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 6ஆம் தேதி அன்று ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.
ஆனால் கடலூர், பெரம்பலூர்,கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று இடங்களில் மட்டும் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்துவதற்கு தமிழக காவல்துறை அனுமதி வழங்கியதை தொடர்ந்து காவல்துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர் ஆர் எஸ் எஸ் அமைப்பினர். இந்த வழக்கின் விசாரணையின் போது தமிழக காவல்துறை தரப்பில் வாதிடப்பட்ட விவாதங்கள் அடிப்படையில் ஏற்கனவே காவல்துறை அனுமதி வழங்கி இருந்த மூன்று இடங்கள் சேர்த்து மொத்தம் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் நடத்தலாம்.
மேலும் சில இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு காவல்துறை மறுத்ததை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம். பல இடங்களில் சுற்றுச்சுவர் கூடிய மைதானத்தில் மட்டும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை நடத்த அனுமதி அளித்தும்,பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியது நீதிமன்றம்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 6ஆம் தேதி நடைபெறும் ஆர்எஸ்எஸ் பேரணியை தற்காலிகமாக ஒத்திவைத்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து ஆர்எஸ்எஸ் பேரணியை தமிழ்நாடு முழுவதும் நடத்துவதற்கான திட்டத்தில் இறங்கியுள்ளனர் ஆர்எஸ்எஸ் அமைப்பினர். இந்த நிலையில் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தாமல் இருக்க தமிழக அரசுக்கும், தமிழக காவல்துறைக்கும் பத்திரிகையாளர் செந்தில் வேல் சில அறிவுரைகளை வழக்கியுள்ளார்.
அதில் ஆர் எஸ் எஸ் பேரணிக்கு உச்ச நீதிமன்றத்தில் இருந்து அனுமதி பெற்று வந்தால் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் வந்தால் கூட சில விஷயங்களை காவல்துறை கடுமையாக கேட்கலாம், அதில் பொதுவாக ஒரு இயக்கத்திற்கு அடையாள அட்டை என்பது முக்கியம். அந்த வகையில் இந்தியா முழுவதும் இருக்கும் ஒரு பெரிய இயக்கமான ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருக்கும் அனைவருக்கும் உறுப்பினர் அட்டை இருக்க வேண்டும் என்று காவல்துறை பேரணி கலந்து கொள்வர்களிடம் கேட்டால் யாரிடமும் அடையாள அட்டை என்பதே கிடையாது என்று தெரிவித்த செந்தில்வேல்.
மேலும் எந்தப் பகுதியில் ஆர்எஸ்எஸ் பேரணி நடக்கின்றதோ, அந்தப் பகுதியைச் சார்ந்தவர்கள் மட்டும் அந்தப் பேரணியில் கலந்து கொள்ள வேண்டும். பிற மாவட்டங்களில் இருந்து அழைத்து வந்து ஆர்எஸ்எஸ் பேரணியில் கலந்து கொள்ள வைப்பது என்பது கூடாது. அடுத்ததாக ஆர்எஸ்எஸ் பேரணியில் பங்கு பெறும் அனைவரும் அவர்களுடைய ஆதார் அட்டையின் நகலை காவல்துறையிடம் முன்பே சமர்ப்பித்து அனுமதி வாங்க வேண்டும்.
அவர்கள் சமர்ப்பிக்கும் ஆதார் அட்டையின் அடிப்படையில் ஆர் எஸ் எஸ் பேரணியில் கலந்து கொள்ளக் கூடியவர்கள் மீது ஏதேனும் குற்றங்கள், வழக்குகள் நிலுவையில் இருந்தால் அவர்களை ஆர்எஸ்எஸ் பேரணியில் கலந்து கொள்ள காவல்துறை அனுமதிக்க கூடாது. இதுபோன்று மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை காவல்துறை அமல்படுத்தினால் ஆர் எஸ் எஸ் இயக்கத்தினரே தாங்களாகவே ஆர்எஸ்எஸ் பேரணியை ரத்து செய்து விடுகிறோம் என்கின்ற முடிவுக்கு வந்து விடுவார்கள் என செந்தில் வேல் அவருடைய மாஸ்டர் பிளானை தமிழக அரசுக்கும் கவல்த்துறைக்கும் அறிவுரை வழங்கியுள்ளார்.
ஆனால் செந்தில் வேல் குறிப்பிட்டது போன்று தமிழகத்தில் நடக்கும் அரசியல் கட்சிகள் நடத்தும் பேரணி மற்றும் பொது கூட்டங்களில் கடை பிடித்தால் பல கட்சிகள் காணாமல் போய் விடும் என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பத்திரிகையாளர் செந்தில் வேல் தெரிவித்துள்ளார் கருத்து குறித்த உங்கள் விமசனங்களை கமெண்ட் செய்யுங்கள்.