கோடி பண நஷ்டத்தை விட கோடி மனக்கஷ்டம் பெரிது.! ரஜினிகாந்தை வெளுத்து வாங்கிய பிரபல நடிகை.!

0

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில்,ரஜினி அரசியலுக்கு வரவில்லை’ என்பது ரஜினியின் முடிவல்ல. பாபாவின் முடிவு. பாபா சொன்னால்தான் எதையும் செய்வேன் என எம்மிடம் ஒருமுறை கூறினார். தற்போது உயர் ரத்தஅழுத்தம் பாபா அவருக்குச் செய்த எச்சரிக்கையென கருதுகிறார்.

மேலும் மதமும் அரசியலும் இணையும். ஆன்மீகமும் அரசியலும் இணையாது. ரஜினி:ஆதரவு உச்சத்தில் அலைமோதிய போதும் அரசியல் இச்சைக்கு அவர் இணங்கவில்லை. கால்நூற்றாண்டு வலிந்து இழுத்தும் கடுகளவும் அசையவில்லை. ஆனால், மனுவாத அச்சுறுத்தலுக்கு மசிவதாய் இசைந்து, அசையாது எழுந்து, நீக்குபோக்காய் நிமிர்ந்தார். ஆன்மீகவாதி செய்த மாற்றம். மதவாதிகளுக்கு ஏமாற்றம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பா.சிதம்பரம் இது குறித்து கூறுகையில், என்னுடைய இனிய நண்பர் திரு ரஜினிகாந்த் அவர்கள் நேற்று அறிவித்த முடிவினை அவருடைய நலம்விரும்பி என்ற முறையில் நான் வரவேற்கிறேன். திரு ரஜினிகாந்த் அவர்கள் ஒரு தார்மீக சக்தியாக விளங்கியவர், விளங்குபவர், விளங்குவார் என்பதில் எனக்கு ஐயமில்லை. 1996ஆம் ஆண்டைப் பல முறை நினைத்துப் பார்த்து நான் மகிழ்ச்சியடைபவன்.

மேலும் 2021ஆண்டையும் அதற்குப் பிறகு 2024ஆம் ஆண்டையும் நான் எதிர் நோக்குகிறேன். அவற்றில் திரு ரஜினிகாந்த் அவர்களுடன் இணக்கமாகப் பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய அரசியல் ஆவல், திரு ரஜினிகாந்த் அவர்கள் நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்க என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார், திரைப்பட நடிகையும் அரசியல் விமர்சகருமான நடிகை கஸ்துரி இது குறித்து கூறுகையில், ரஜினிகாந்த் இந்த முடிவு எதிர்பார்த்ததுதான்.

எத்தனையோ முறை நான் உட்பட பலரும் சொன்னதுதான். எப்பவோ சொல்லியிருந்தால் ஏராளமானவர்களுக்கு வலியை தவிர்த்திருக்கலாம். வருடங்களை மிச்சப்படுத்தியிருக்கலாம். இப்பவாச்சும் சொன்னாரே. இப்ப இல்லை, எப்பவுமே இல்லை ! கோடி பண நஷ்டத்தை விட கோடி மனக்கஷ்டம் பெரிது. உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது. ரஜினி அவர்களின் முடிவுக்கு பாராட்டுக்கள். நீங்கள் பூரண நலத்துடன் நிம்மதியாக நீடூழி வாழவேண்டும் என நடிகர் ரஜனிகாந்த் முடிவுக்கு கடுமையாக நடிகை கஸ்துரி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .

என்னை மன்னிசிடுங்க ! விஜயகாந்தை நேரில் சந்தித்து கதறி அழுத வடிவேலு.! பிரேமலதா என்ன சொன்னார் தெரியுமா.?