கொங்கு நாடு விவகாரம்… சந்திரபாபு நாயுடுவுக்கு ஏற்பட்ட நிலைதான் திமுகவிற்கும் ஏற்படும்… முதல்வருக்கு எச்சரிக்கை.!

0
Follow on Google News

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும், கொங்கு பகுதிகளில் திமுகவை அம்மக்கள் அங்கிகரிக்கவில்லை என்பதை நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தியுள்ளது. தேர்தல் முடிவுக்கு பின் கொங்கு பகுதியில் திமுக தோல்வியை தழுவியதை தொடர்ந்து முட்டாள் கோவையன்ஸ் என்று ஒரு பிரிவினர் சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்ய இதற்கு பதிலடி தரும் விதத்தில் சென்னையில் திமுக முழு வெற்றியை பெற்றதை மேற்கோள்காட்டி முட்டாள் சென்னையன்ஸ் என்று சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டது.

இந்நிலையில் கோயம்புத்தூர் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வேனும்னா மோடியிடம் கேளுங்க என திமுக செய்தி தொடர்பாளர் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் தடுப்பூசி விவகாரத்தில் சென்னையுடன் ஒப்பிடும் போது மிக குறைந்த அளவில் கோவைக்கு தடுப்பூசி வழங்கியுள்ளதை புள்ளி விவரங்களுடன் வெளியிட்டு, திமுக அரசு கோவை மக்களை வஞ்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினார்.

இந்த பரபரப்பான சூழலில் முதல்வராக பதவி ஏற்ற பின் முதல் முதலில் கோவைக்கு விஜயம் மேற்கொண்ட முதல்வர் முக ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோ பேக் ஸ்டாலின் என்கிற ஹாஸ்டக் சமூக வலைதளத்தில் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. அதில் கொங்கு பகுதியை திமுக தொடர்ந்து புறக்கணித்து வருவதால், எங்களுக்கு தேவையானதை மத்திய அரசிடம் இருந்து நாங்களே பெற்று கொள்கிறோம், அதனால் எங்கள் பகுதில் முதல்வர் வரவேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது திமுக ஆட்சிக்கு வந்த 2 மாதத்தில் சுமார் ₹15,500 கோடி கடன் வாங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், அதில் சென்னையில் மட்டும் வெறும் 4 சொகுசு பூங்காக்களை ₹2500 கோடி செலவில் அமைக்கவிருப்பது ஏன் என்ற கேள்வியை முன் வைத்துள்ள கொங்கு பகுதி மக்கள் ஆனால் அத்திக்கடவு, அவிநாசி திட்டம் பெறுவதற்கு நீண்ட வருடமாக நங்கள் போராட வேண்டியிருக்கிறது என தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பரபரப்பான அரசியல் சூழலில் பாஜக ஐடி பிரிவு மாநில தலைவர் CTR நிர்மல் குமார், கொங்கு பகுதி மக்களின் கோரிக்கையை ஜாதி ரீதியிலானது என திமுகவினர் கொச்சைப்படுத்தி வருவதை விடுத்து, அவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் (அத்திக்கடவு) பணியை ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும். தவறினால் சந்திரபாபு நாயுடுவுக்கு ஏற்பட்ட நிலைதான் திமுகவிற்கும் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.