வலிமை அப்டேட் வந்தாச்சு… திருவிழா போல கொண்டாடி வரும் அஜித் ரசிகர்கள்…

0
Follow on Google News

வலிமை அப்டேட் அஜித் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். நடிகர் அஜித் என்றாலே அவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. உலக அளவில் ரசிகர்கள் பட்டாளம் கொண்ட ஒரு தமிழ் திரையுலக நடிகர் என்றால் அது நடிகர் அஜித் மட்டும் தான். இந்தநிலையில் நடிகர் அஜித் நடித்து H.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் வலிமை.

இந்த திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடாமல் படக்குழு தட்டிக் கழித்து வந்தனர். ஆனால் அஜித் ரசிகர்கள் விடுவதாக இல்லை படக்குழுவினர் முதல் விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள், என பிரதமரையும் விட்டு வைக்காமல் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் செய்த வேலையால் பொறுமை இழந்த, நடிகர் அஜித் ரசிகர்களிடம் வலிமை படக்குழுவினர்களுடன் பேசி விரைவில் வலிமை திரைப்படத்திற்கான அப்டேட் வெளியீட ஏற்பாடு செய்வதாக கூறினார்.

அது வரை பொறுமை காக்குமாறு ரசிகர்களிடம் அஜித் கூறினார். இதன்பிறகு நடிகர் அஜித்தின் பிறந்தநாள் அன்று வலிமை திரைப்படத்திற்கான அப்டேட் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர். ஆனால் கொரோனா பெரும் தொற்றா பரவலால் தள்ளிப் போனது. இதான் பிறகு வலிமை படத்திற்கான எந்த ஒரு அப்டேட் படக்குழுவினரிடம் வெளியாக வில்லை. இந்த நிலையில் நேற்று மாலை அஜித் நடிக்கும் வலிமை படத்திற்கான மோஷன் போஸ்டர் வெளியாகும் என்று நேற்று படக்குழுவினர் அறிவித்தனர்.

இதனையடுத்து நேற்று மாலை மாலை வலிமை படத்திற்கான மோஷன் போஸ்டர் வெளியானது. அஜித் ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பு நிறைவேறியதால் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து திருவிழா போல கொண்டாடி வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் பட்டையை கிளப்பி வருகிறது வலிமை மோஷன் போஸ்டர்…

error: Content is protected !!