திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன ‘ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்’ என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் இவருக்கு சொந்தமான இந்த நிறுவனம் , கோவையில் 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இந்த நிறுவனம் மூலம் கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்’ என்ற கட்டுமான நிறுவனம் மேற்கொண்ட பண பரிவர்த்தனைகளில் முறைகேடு நடந்திருப்பதாகவும், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்ததை தொடர்ந்து, வருமான வரித் துறை அதிகாரிகள் இதற்கு முன்பு ஏற்கெனவே சோதனை நடத்தினார்கள். இந்நிலையில், வருமான வரித் துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள்.

கே என் நேரு மட்டுமின்றி, அவருடைய உறவினர்கள் வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிரடி சோதனை மேற்கொண்டனர், இதில் சென்னை ஆரியபுரம் – பிஷப் கார்டன் பகுதியில் அமைந்திருக்கும், அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி கே.என்.ரவிச்சந்திரனின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. கே.என்.ரவிச்சந்திரன் வீட்டில் சோதனை நடந்து கொண்டிருந்த போதே, அங்கே வீட்டில் வைத்து கே.என்.ரவிச்சந்திரனிடம் விசாரணையை மேற்கொண்டு வந்தனர் அமலாக்க துறையினர்.
மேலும் அமலாக்க துறை அதிகாரிகள் அங்கிருந்தவர்களின் தொலைபேசிகளை கைப்பற்றி வைத்து இருந்ததால், தன்னுடை தம்பி வீட்டில் என்ன நடக்கிறது என்கிற எந்த தகவலும் தெரியாமல் பரிதவித்து வந்துள்ளார் அமைச்சர் கே என் நேரு என கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் கே என் நேரு தம்பி கே என் ரவிச்சந்திரனிடம் விசாரணை நடத்தி கொண்டிருந்த அமலாக்க துறையினர், திடீரென கே.என்.ரவிச்சந்திரனை தங்களது காரில் அழைத்துச் சென்றனர்.
கே.என்.ரவிச்சந்திரனை எங்கே அழைத்து செல்கிறார்கள், ஒரு வேலை கைது செய்ய போகிறார்களா அமலாக்க துறை என்கிற பரபரப்புக்கு மத்தியில், நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து கே.என் ரவிச்சந்திரனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர் அமலாக்க துறையினர்.
அமைச்சர் கே என் நேரு தம்பி, கே என் ரவிச்சந்திரன் டி.வி.ஹெச் என்னும் கட்டுமான நிறுவனத்தின் சேர்மனாக இருந்து வருவது மட்டுமில்லாமல், இவர் பல்லாயிரம் கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்ததாக ஏற்கனவே வருமான வரித்துறையினர் இவர் மீது வழக்கு தாக்கல் செய்திருந்ததன, அதையெல்லாம் தோண்டி எடுத்து துருவி துருவி அமலாக்க துறை அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் தற்பொழுது நடைபெற்ற சோதனையில் கைப்பற்ற ஆவணங்கள், ஆகியவற்றின் அடிப்படையில் ரவிச்சந்திரனிடம் விசாரணை நடத்திய அமலாக்க துறை, ஒவ்வொரு கேள்விகளுக்கு, எழுத்துப்பூர்வமாக பதிலளித்து வீடியோ வாக்குமூலம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
அதே போன்று கே என் ரவிச்சந்திரன் அலுவல் பணிகளையும் மேற்கொண்டு வரும் பெண் உதவியாளரையும் அமலாக்கத்துறை அலுவலகம் அழைத்து வந்து விசாரணை நடத்திய அமலாக்க துறை அதிகாரிகள். சுமார் 5 மணி நேரமாக இருவரிடமும் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டு வாக்குமூலங்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், செந்தில் பாலாஜி தம்பிக்கு ஏற்ப்பட்ட ஒரு சூழல் தான் தற்பொழுது கே என் நேரு தம்பிக்கு ஏற்பட்டுள்ளதால் விரைவில் அடுத்த சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு கைது செய்ய வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.