தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆண்டுதோறும் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தி வருகிறார். இந்த மாநாட்டில் அணைத்து துணைவேந்தர்கள் பங்கேற்று வருகிறார்கள், ஆனால் இந்த வருடம் ஆளுநர் ஆர் என் ரவி ஏற்பாடு செய்துள்ள துணை வேந்தர் மாநாடு தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர் என் ரவி இருவருக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
இதற்கிடையே, சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ரவி கிடப்பில் போட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டது. இந்த பத்து மசோதாக்களில் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதாவும் ஒன்று.

இந்நிலையில், அவசர அவசரமாக டெல்லி சென்ற ஆளுநர் ஆர் என் ரவி, அங்கே சுமார் 3 நாட்கள் தங்கி, துணை ஜனாதிபதி, மத்திய உள்துறை செயலாளர் ஆகியோரை சந்தித்து திமுக அரசுக்கும், முதல்வர் முக ஸ்டாலினுக்கும் செக் வைக்கும் வேளையில் இறங்கினார். டெல்லியில் நடந்த தீவிர ஆலோசனைக்கு பின்பு சில முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது.
வேந்தர் பொறுப்பு தன் கைவசம் தான் , உச்சநீதி மன்றமே சொல்லி விட்டது என முதல்வர் தரப்பு இருக்க, மத்திய அரசு மற்றும் ஆளுநர் தரப்பு இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் லார்ஜ் பெஞ்சுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள், இதனை தொடர்ந்து மீண்டும் உச்சநீதிமன்றம் ஆளுநர் தான் வேந்தர் என தெரிவித்து விட்டால், முதல்வர் முக ஸ்டாலினுக்கு மிக பெரிய முக்குடைப்பு சம்பவமாக அமைந்து விடும்.
இந்நிலையில் தற்பொழுது ஆளுநர் மாளிகை சார்பில் துணைவேந்தர்கள் வருடாந்திர மாநாடு ஊட்டியில் ஏப்ரல் 25, 26-ம் தேதிகளில் நடைபெற உள்ளது என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில். இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் மாநாட்டில் பங்கேற்குமாறு மாநிலத்தில் உள்ள 48 மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் துணை ஜனாதிபதி வருவது தான் முதல்வர் முக ஸ்டாலினுக்கு மிக பெரிய சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாநாட்டிற்காக வரும் துணை ஜனாதிபதியை, முதல்வர் என்கிற முறையில் நிச்சயம் முதல்வர் முக ஸ்டாலின் வரவேற்க செல்ல வேண்டும்.
அப்படி முதல்வர் முக ஸ்டாலின் செல்ல வில்லை என்றால், துணை ஜனாதிபதியை அவமதிக்கும் செயலாகிவிடும். அதே நேரத்தில் துணைவேந்தர்கள் மாநாட்டில் துணைவேந்தர்கள் யாரும் கலந்து கொள்ள கூடாது என முதல்வர் முக ஸ்டாலின் தடுத்தாலும், துணை ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வு அது என்பதால் முக ஸ்டாலினுக்கு மிக பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடும்.
அந்த வகையில் துணை ஜனாதிபதியை வரவேற்க்க வேண்டிய கடமை முதல்வருக்கு இருக்கு, அப்படி இருக்கையில் ஆளுநர் ஏற்பாடு செய்த துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு வரும் துணை ஜனாதிபதியை முதல்வரே நேரடியாக வரவேற்பு கொடுத்தால், அது முதல்வர் முக ஸ்டாலினுக்கு முக்குடைப்பு சம்பவமாக அமைந்துவிடும், அதே நேரத்தில் அவர் வரவேற்க்க செல்லாமல், அல்லது மாநாட்டில் துணைவேந்தர்கள் யாரும் கலந்து கொள்ள விடாமல் தடுத்தால், அது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி விடும் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.