தமிழிசையா.? தமிழச்சியா.? அனல் பறக்கும் தென் சென்னை தேர்தல் களம்… அரசியலில் ரீ – என்ட்ரி கொடுத்த தமிழிசை…

0
Follow on Google News

சூரியன் உதிக்கிறதோ இல்லையோ, இலை துளிர்க்கிறதோ இல்லையோ, பம்பரம் சுற்றுகிறதோ இல்லையோ, மாம்பழம் பழுக்கிறதோ இல்லையோ, தமிழ்கத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தராஜன் பேசிய இந்த மேடை பேச்சுக்களை தமிழக அரசியலில் இருக்கின்ற யாரும் மறந்து விடமுடியாது. பாஜக தலைவராக தமிழிசை சௌந்தராஜன் இருக்கும் பொழுது, தமிழகம் முழுவதும் மிக பெரிய அளவில் மோடி எதிர்ப்பு அலை, பாஜக என்றால் தமிழருக்கு எதிரி என்கிற ஒரு பிம்பத்தை தமிழக மக்கள் மத்தியில் எதிர்கட்சிகளால் கட்டியமைக்கப்பட்டிருந்த காலம் அது.

அப்படி பாஜக என்ன செய்தாலும் அது தமிழருக்கு எதிரானது என்கிற ஒரு போலி பிரச்சாரம் தலை தூக்கி இருந்த காலத்தில் அப்போது மாநில தலைவராக இருந்த தமிழிசை என்ன பேசினாலும் எதிர்கட்சிகளால் கடும் கேலி கிண்டலுக்கு உள்ளானது. ஆனால் தன்னை கேலி கிண்டல் செய்யும் எதிர்கட்சிகாரர்களை வைத்தே தமிழகம் முழுவதும் பாஜகவின் தாமரை சின்னத்தை கொண்டு சேர்ந்தவர் தமிழிசை சௌந்தராஜன்.

கடும் கேலி கிண்டலுக்கு மத்தியில், ஒரு பெண் என்றாலும் கூட பொதுவாழ்க்கைக்கு வந்தால் இதெல்லாம் ஏற்று கொண்டு தான் ஆக வேண்டும் என தொடர்ந்து அரசியல் பணியாற்றி வந்த தமிழிசை சௌந்தராஜனை தெலுங்கானா அருநராக பதவி கொடுத்து அவருடைய உழைப்புக்கு அங்கீகாரம் கொடுத்தது பாஜக, அதுவரை யாரெல்லாம் தமிழிசை சௌந்தராஜனை ட்ரோல் செய்து கேலி கிண்டல் செய்தார்களோ, அவர்களெல்லாம் ஒரு தமிழச்சி ஆளுநர் என்று பெருமை கொள்ளும் வகையில் வாழ்த்து தெரிவித்த நிகழ்வும் அரங்கேறியது.

தொடர்ந்து தெலுங்கானா ஆளுநர், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் என இரண்டு மாநிலத்தில் ஆளுநராக பணியாற்றி வந்த தமிழிசை சௌந்தராஜன் தற்பொழுது தன்னுடைய ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளது தமிழக அரசியலில் யாரும் எதிர்ப்பார்க்காத ஓன்று, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அரசியலில் ரீ என்ட்ரி கொடுக்கவே தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்துள்ளார் .
அந்த வகையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழிசை போட்டியிடுவது உறுதி ஆனால் எந்த தொகுதி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென் சென்னை பலரும் விவாதம் நடத்தி வரும் நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னையில் தமிழிசை சௌந்தராஜன் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தற்பொழுது தென் சென்னையில் திமுக எம்பியாக இருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன் போட்டியிட இருக்கிறார். கடந்த சட்டசபை தேர்தலில் சென்னையில் பலத்த அடிவாங்கிய அதிமுக குறிப்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட சென்னையில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் மண்ணை கவ்வினார்கள், அந்த வகையில் முன்றாவது இடத்தை தக்க வைப்பதில் அதிமுகவுக்கு நாம் தமிழர் கட்சிக்கு சென்னையில் பல இடங்களில் கடும் போட்டி நிலவும் என்கிறது கருத்து கணிப்பு.

இந்த பரபரப்பான அரசியல் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தென் சென்னையில் களம் இறங்க இருக்கும் தமிழிசை சௌந்தராஜனுக்கு திமுக வேட்பாளராக களம் இறங்கும் தமிழச்சி தங்கபாண்டியனுக்கும் நேரடி போட்டியை தேர்தல் களத்தில் காணலாம், அந்த வகையில் தமிழிசையா.? தமிழச்சியா.? என போட்டி நிலவும் போது தற்பொழுது தென் சென்னை தொகுதியின் திமுக எம்பி தமிழச்சி மீது அந்த தொகுதி மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருவது தமிழிசைக்கான வெற்றி மிக பிரகாசமாக தென் சென்னை தொகுதியில் உள்ளது என்கிறது அரசியல் களநிலவரம்.