தமிழக முதல்வர் டெல்லி பயணம்..!தனது ராஜதந்திரத்தால் நீட் தேர்வு ரத்து போன்ற பல செய்திகளுடன் தமிழகம் திருப்புவாரா.?

0
Follow on Google News

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள முக ஸ்டாலின் முதல் முறையாக இன்று டெல்லி சென்றுள்ளார். தனி விமானம் மூலம் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். முதல்கட்டமாக டெல்லியில் கட்டப்படும் திமுக அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிடும் முக ஸ்டாலின், அதன்பின்னர் தமிழ்நாடு இல்லத்திற்க்கு சென்று அங்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார். பின்னர் இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் மோடியை முதல் அமைச்சர் முக ஸ்டாலின் சந்திக்கிறார்

மார் ஒருமணி நேரம் நடைபெறும் பிரதமர் மோடி உடனான தமிழக முதல்வரின் சந்திப்பில், நீட் தேர்வு விவகாரம், ஜிஎஸ்டி நிலுவை தொகை, கொரோனா தடுப்பூசி, மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. பிரதமர் உடனான சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசும் தமிழக முதல்வர், மறுநாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியை சந்திக்கிறார்.

இந்நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோரையும் முதல்வர் சந்திக்கலாம் என கூறபடுகிறது, திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து கட்டி முடிக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்து நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்துள்ளது.

இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலினின் டெல்லி பயணம் தமிழக மக்கள் மத்தியில் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது, தனது ராஜ தந்திரத்தால் மத்திய அரசை அடி பணியவைத்து நீட் தேர்வு ரத்து போன்ற பல செய்திகளுடன் தமிழகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.