பாஜகவின் அமைப்பு தேர்தல் நடந்து முடிந்து இந்தியா முழுவதும் பாஜகவின் புதிய மாவட்ட தலைவர்கள் அறிவிப்பு தொடர்ந்து வெளியாகி வந்து கொண்டிருக்கையில், தமிழக பாஜகவில் மட்டும், அண்ணாமலை தொடர்வாரா.? அல்லது வேறு ஒரு புதிய மாநில தலைவர் அறிவிப்பு வெளியே வருமா என்கிற குழப்பம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை நீடித்து வந்த நிலையில் , தற்பொழுது அதற்கான எந்த குழப்பமும் இல்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தமிழகத்தில் பாஜகவின் மூத்த தலைவராக இருக்க கூடியவர்கள், குறிப்பாக பாஜக வளர்ச்சிக்கு தங்கள் உழைப்பை அர்ப்பணித்த மூத்த தலைவர்களாக இருக்க கூடிய அனைவருமே அண்ணாமலைக்கு ஆதரவாகவும், குறிப்பாக டெல்லி பாஜக தலைமையிடம், மீண்டும் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை தான் வர வேண்டும் என விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
![](https://dinaseval.com/wp-content/uploads/2025/02/annamalai--1024x575.jpg)
ஆனால் திராவிட ஏஜெண்டுகளாக செயல்படும் பாஜகவில் இருக்கும் இரண்டாம் அல்லது மூன்றாம் கட்ட தலைவராக இறக்க கூடிய ஒன்று அல்லது இருவரே, அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து வெளியேற்றி விட்டு தலைவர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என்கிற பேராசையில், பல உள்ளடி வேலைகளை செய்து வந்துள்ளனர். குறிப்பாக திராவிட ஆதரவு சேனல்களுடன் தொடர்பு வைத்து கொண்டு,
அண்ணாமலை இமேஜை பாஜக தொண்டர்கள் மற்றும் பாஜக ஆதரவாளர்கள் மத்தியில் சரிவை ஏற்படுத்தும் விதத்தில், டெல்லி பாஜக தலைமை அண்ணாமலை மீது அதிருப்தியில் உள்ளது, அதனால் தான் அவரை லண்டன் அனுப்பி வைத்துவிட்டது, என பரப்பினார்கள். ஆனால் அண்ணாமலை லண்டனில் இருந்து வந்த பின்பு, அண்ணாமலைக்கு பாஜகவில் வேறு பொறுப்பு வழங்கப்படுகிறது.
அதனால் அடுத்த பாஜக தலைவர் அவர் தான் இவர் தான் என்கிற பொய் செய்திகளை பாஜகவில் இருக்கும் திராவிட ஏஜண்டுகள், திராவிட ஆதரவு ஊடகங்கள் மூலமாக பரப்பி வந்தனர், ஆனால் அவர்கள் முயற்சிகளை எல்லாம் வீணாய் போவது போன்று அமைத்து விட்டது. மீண்டும் பாஜக தலைவ்ராக அண்ணாமலை தொடர்வார் என டெல்லி பாஜக தலைமை முடிவு செய்துள்ளது.
அதே நேரத்தில் பாஜக தலைவராக அண்ணாமலை தொடர்வார், அதுவும் எது வரை தொடர்வார் என்பதை அவரே சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஒன்றில் உறுதி படுத்தும் விதத்தில் பேசியுள்ளது திராவிட கட்சிகளுக்கும், பாஜகவில் இருக்கும் திராவிட ஏஜெண்டுகளுக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில், அதே நேரத்தில் பாஜக தொண்டர்கள் , மற்றும் ஆதரவாளர்களுக்கும் மகிழ்ச்சி அடையும் விதத்தில் அமைத்துள்ளது.
அண்ணாமலை அந்த நிகழ்வில் பேசுகையில், பாஜக தலைவராக தொடர முடியாது என்பது எனக்குத் தெரியும். இந்தக் கட்சியைப் பொறுத்தவரை, ஒருவரே பதவியில் நீடிக்க முடியாது. ஆனால், அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுக்கும் வரை இங்குதான் இருப்பேன். ஊழல் பெருச்சாளிகள் 35 அமைச்சர்கள் 2026இல் சிறைக்குச் செல்வதைப் பார்ப்பதற்கு நான் இருப்பேன். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என 2026 வரை நான் தான் பாஜக தலைவர் என அண்ணாமலை பேசியுள்ளது திமுகவுக்கும், பாஜகவில் இருக்கும் திராவிட ஏஜெண்டுகளுக்கும் இடியாய் விழுந்துள்ளது.