தமிழ் திரையுலகம் மறந்த டி.எம்.எஸ்.! உயிர் கொடுக்கும் பேராசிரியர் ஸ்ரீநிவாசன்.! கோரிக்கையை ஏற்பாரா எடப்பாடியார்?

0
Follow on Google News

மதுரையில் பிறந்த ‘டி.எம்.எஸ்’ என்றும், ‘டி. எம் சௌந்தரராஜன்’ என்று அழைக்கப்படும், ‘டி.எம்.எஸ்’ அவர்கள், 1946லிருந்து 2007 ஆம் ஆண்டு வரை, தமிழ்த் திரையுலகில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இருந்து, தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்ஷங்கர், ரவிச்சந்தர், நாகேஷ், என்.டி. ராமராவ், ஏ. நாகேஸ்வர ராவ், ரஞ்சன், காந்தா ராவ், டி.எஸ். பாலையா, ஜக்கையா போன்றோருக்குப் பின்னணிக் குரல் கொடுத்தவர்.

இவர் பல்வேறு திரைப்பாடல்களைப் பாடியுள்ளார். திரைப்பாடல்கள் மட்டுமின்றி, பல பக்திப் பாடல்களையும் பாடிய டாக்டர் டி.எம். சௌந்தரராஜன், 11000 தமிழ்ப் பட பாடல்களையும், 2500 பக்திப் பாடல்களையும் பாடி, பல்வேறு இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணிபுரிந்து, பல பாடல்களுக்கு இசையமைத்து, ‘பட்டினத்தார்’, ‘அருணகிரிநாதர்’, ‘கல்லும் கனியாகும்’ & ‘கவிராஜ காலமேகம்’ போன்ற சில தமிழ்ப் படங்களில் நடித்த டி.எம். சௌந்தரராஜன் அவர்கள் பெற்ற விருதுகளும், அங்கீகாரங்களும் எண்ணிலடங்காதவை.

இந்நிலையில் மதுரையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் கோரிக்கை மனு அளித்தார், அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, பிரபல பின்னணி இசை பாடகர் திரு T.M. சௌந்தர்ராஜன் அவர்களின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு துவங்குகிறது. ஆண்மை நிறைந்த கம்பீரமான குரலுக்கும், மதுரை மண்ணுக்கும், சௌராஷ்ட்ரா சமூகத்திற்கும், சொந்தக்காரர் T.M.S என்பதை தமிழக வரலாறு தன் பக்கங்களில் பதிவு செய்திருக்கிறது.

மக்கள் திலகம் எம். ஜி. ஆர் அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கான பல காரணங்களுள் ஒன்று திரு T.M. சௌந்தர்ராஜன் அவர்களின் வெண்கலக் குரல் தமிழ்நாட்டின் கலைத்துறையின் தலை மகன்களுக்கு தமிழக அரசு சிறப்பு செய்திருக்கிறது. திரு என்எஸ் கிருஷ்ணன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்றவர்கள் எல்லாம் இதற்கு உதாரணங்கள், அந்த வரிசையில் திருடினம்ளர் அவர்களுக்கும் அவர் பிறந்த மதுரை மண்ணில் தமிழக அரசு மணிமண்டபம் அமைத்து அவரது நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என முதல்வரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காலத்தால் அழியாத T.M. சௌந்தர்ராஜன் குரலில் உருவான பாடல்கள் திரும்பும் திசையெங்கும் இன்றும் வரை ஒலித்து கொண்டிருக்கையில், அவரின் நூற்றாண்டு விழாவை தமிழ் திரையுலகில் இருக்கும் முக்கிய பிரபலங்கள் கூட மறந்த நிலையில், அவரது சாதனைகளுக்கு உயிர் கொடுக்கும் விதத்தில் அவர் பிறந்த மதுரை மண்ணில் தமிழக அரசு மணிமண்டபம் அமைத்து தர பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் அவர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது உலகம் முழுவதும் உள்ள T.M. சௌந்தர்ராஜன் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.