அடடே genius, உன்னை விட எனக்கு அறிவும் அதிகம்.! கடவுளை துதித்த காலம் உண்டு.. கொந்தளித்த நடிகை கஸ்தூரி.!

0
Follow on Google News

தற்போது திராவிடமா.? தமிழா.? என்கிற கடும் கருத்து மோதல் தமிழக அரசியலில் நீடித்து வருகிறது. தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘பிறப்பில் ஏற்றதாழ்வு இல்லை என்பவரும்,அனைவரும் சமம் என்று உணர்வோரும்,சமூகநீதியில் நம்பிக்கை உள்ளோரும் தங்களை ‘திராவிடர்’ என்று அழைத்துகொள்ளலாம்’ என பெரியார் தெரிவித்த கருத்தை சுட்டி காட்டி பதிவு செய்திருந்தார் பீட்டர் அல்போன்ஸ்.

இதற்கு நடிகை கஸ்துரி, திரிந்த பால் உடலுக்கு கேடு. திரிந்த சொல் உண்மைக்கு கேடு. தமிழ் இருக்க திராவிடம் எதற்கு? சங்கக் களஞ்சியம் அ‌ல்லது தமிழ் களஞ்சியம் என்பது மட்டுமே ஏற்றுக் கொள்ள கூடியது.என தனது சமூக வலைதளத்தில் மூலம் பதிலடி கொடுத்திருந்தார் கஸ்துரி. இதற்கு திராவிட ஆதரவாளர்கள் கஸ்துரியை ரவுண்டு கட்டி கேள்வி எழுப்ப அதற்க்கு சற்றும் சளைக்காமல் தக்க பதிலடி கொடுத்து வெளுத்து வாங்கி வருகிறார் நடிகை கஸ்தூரி.

மேலும் பேர மாத்திடுட்டு பேசுங்க என திவ்யா மருந்தையா என்கிற பெண் பதிவு செய்ய, அதற்கு தோடா! இந்தம்மா வட மொழியில பேர் வச்சுகிட்டு வட சுடுமாம், நான் பேரை மாத்திகிடணுமாம். அடுத்து ஸ்டாலின் உதயநிதி போன்ற பிற மொழி பெயர்களை எதிர்த்து போராட போகுதாம் என கஸ்தூரி பதிலளித்திருந்தார். “திவ்யா மருந்தையா” இதுல எங்க வடமொழி இருக்காம்? என ஒருவர் கேள்வி எழுப்ப. அதற்கு கஸ்தூரி சுத்தம். இதுதான் திராவிட பகுத்தறிவு உங்களுக்கு அளித்தது. உங்க அடிப்படை அடையாளத்தை கூட இனம் காண முடியாதவர்கள் திராவிடம் ஒரு இனம் என்று பிதற்றுவதை நினைத்து அழுவதா சிரிப்பதா என பதிலடி கொடுத்துள்ளார்,

தொடர்ந்து நான்கு ஆயிரம் திவ்ய பிரபந்தம் கேள்வி பட்டது உண்டா, அது அவ்வளவு அறிவு என ஒருவர் கேள்வி எழுப்ப. அதற்கு நடிகை கஸ்தூரி அடடே genius, உன்னை விட எனக்கு அறிவு (ம்) அதிகம்.
திவ்ய, பிரபந்தம் இரண்டும் சமஸ்கிரதம் வாக்கியம். ஆரியம் திராவிடம் எ‌ன்று பித்தலாட்ட பிரிவினை அரசியல் செய்யாமல் கடவுளை துதித்த காலம் உண்டு தமிழ் வரலாற்றில் என சளைக்காமல் பதிலடி கொடுத்தார்.

இதனை தொடர்ந்து யேக்கா உனக்கு ” திவ்ய பிரபந்தம்* தெரியுமா…அப்போ அது என்ன வட மொழியா? என மறொருவர் கேள்வி எழுப்ப. அதற்கு நடிகை கஸ்தூரி உங்களையும் அறியாமல் முதல் முறையா ஒரு விஷயத்தை சரியா சொல்லிடீங்க ! “திவ்ய பிரபந்தம்” என்ற பெயர் வடமொழியே தான் !! தமிழ் செய்யுள்கள், அதில் நிறைய வடமொழி சொற்கள் உண்டு ! தமிழ்வரலாறு அறிவோம் ! என கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார்.