ஸ்டாலின் தனது பெயரை இசுடாலின் என்று வைத்திருக்க வேண்டும்.!எதற்கு தெரியுமா.? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்.!

0
Follow on Google News

சென்னை கோடம்பாக்கத்தில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று துவக்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழுக்கு புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் என்ன செய்தார்கள் என்று நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் கேட்கிறார். அவருக்கு தேவையானால் அவர்கள் செய்த தமிழ்ப்பணிகளை புத்தகமாக கொடுக்கிறேன். அதை சீமான் தயவுசெய்து படித்து விட்டு பேசட்டும்.

உண்மை தெரியாமல் திசை திருப்பக்கூடாது. அவ்வாறு பேசினால் புரட்சித்தலைவர் தொண்டர்கள் அதை ஏற்க மாட்டார்கள். புரட்சித்தலைவரை புழுதி வாரி தூற்ற நினைத்தால் அது உங்களுக்கே கேடாக முடியும். சீமான் போன்றவர்கள் புரட்சித்தலைவர் புகழை அழிக்க முடியாது. புரட்சித்தலைவர் புகழை அழிக்க நினைப்பவர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வார்கள். கழகம் ஏராளமான தொண்டாற்றியுள்ளது.

தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத்தம் தமிழ் பல்கலைக்கழகம் அமைத்தது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை செய்துளளது. தஞ்சையில் தமிழ்ப்பல்கலைக்கழகம் என்ற ஒன்று புரட்சித்தலைவர் ஆட்சிக்கு வந்த பின்னர் தான் உருவானது. மதுரையில் உலகத்தமிழ்ச் சங்கத்தை உருவாக்கியவரே புரடசித்தலைவர் தான். டைப் ரைட்டர் தமிழில் இல்லை: தமிழ் டைப்ரைட்டரை எல்லா அரசு அலுவலகங்களிலும் வைக்க வேண்டும் என்று உத்தரவு போட்டவரே புரட்சித்தலைவர் தான்.

பெரியாருடைய தமிழ்ச்சீர்திருத்த எழுத்துக்களை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டவரே புரட்சித்தலைவர் தான். ஆனால் ஸ்டாலின் பெரியாருடைய தமிழ்ச் சீர்திருத்தத்தையே மதிக்கவில்லை. உண்மையிலேயே பெரியாருடைய தமிழ்ச்சீர்த்திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் ஸ்டாலின், தன்னுடைய பெயரை சுடாலின் என்று மாற்றிக்கொள்ள வேண்டும். இதுவரை அவர் ஸ்டாலின் என்று தான் அவர் கையெழுத்திட்டு வருகிறார்.

பெரியாரை மதிப்பதாக இருந்தால் ஸ்டாலின் தனது பெயரை இசுடாலின் என்று வைத்திருக்க வேண்டும். பெயரளவில் கூட ஸ்டாலின் பெரியாரை மதிக்கவில்லை. நடைமுறையில் எங்கே பின்பற்ற போகிறார்கள். அரசு துவங்கியுள்ள அம்மா மினி கிளினிக்குகளுக்கு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் உரிய நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.