சிங்கள நிறுவனம் லைக்கா படம் எடுக்கலாம்.. சிங்கள பெண் பூஜா நடிக்கலாம்.! தமிழன் முரளிதரனுக்கு எதிர்ப்பு.!

0
Follow on Google News

இலங்கையில் உள்ள லைக்கா நிறுவனம் தமிழ் படம் தயாரிக்கலாம், சிங்கள நடிகை பூஜாவை வைத்து சீமான் படம் எடுக்கலாம், ஆனால் சாதனை படைத்த தமிழன் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு குறித்து படம் எடுக்க கூடாதா.? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மிக நெருக்கமாக இருக்க கூடிய நிறுவன என கூறப்படும் சினிமா தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம்,விஜய் நடிப்பில் வெளியான கத்தி திரை படத்தை தயாரித்த போது.

அந்த நிறுவனத்துக்கு எதிராகவும் நடிகர் விஜய் மற்றும் அந்த படத்தின் இயக்குனர் முருகதாசுக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியது, பலரும் போராட்டம் நடத்தினர்,இதனால் படத்திற்கு பெரும் பிரச்சனை ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘கத்தி’ படம் என் இனத்திற்கு எதிரான படம் அல்ல. முருகதாசும், விஜய்யும் தமிழ்ப் பிள்ளைகள். அதன் தயாரிப்பு நிறுவனத்தின் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையாய் இருக்கும் பட்சத்தில் ‘லைக்கா’ நிறுவனத்தை எதிர்ப்போம். அதற்காக ‘கத்தி’ படத்தையோ, விஜய்யையோ எதிர்க்க முடியாது என தெரிவித்தார்.

மேலும் சீமான் இயக்கத்தில் உருவான தம்பி படத்தில் சிங்கள இனத்தை சேர்ந்த நடிகை பூஜாவை கதாநாயகியாக நடிக்க வைத்தார் சீமான், இந்நிலையில் சிங்கள நிறுவனம் படம் தயாரிக்கவும், சிங்கள பெண் தமிழ் சினிமாவில் நடிக்கவும் எந்தவகையில் எதிர்ப்பு தெரிவிக்காத சில அரசியல் மற்றும் பிரபலங்கள், தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில், உலக அளவில் சாதனை படைத்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு படத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு மட்டும் எதிர்ப்பு என பொது மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.