அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த 2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி அவர் பண மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் பாதிக்கபட்டவர்கள் புகார் தெரிவித்தனர். இதன் பின்பு நடந்த விசாரணை மற்றும் சோதனையின் அடிப்படையில் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், உதவியாளர் சண்முகம் உட்பட்டவர்கள் மீது போலீஸார் 3 மோசடி வழக்குகள் பதிவு செய்தனர்.
இந்நிலையில், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னைஉயர் நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜியின் உதவியாளர் சண்முகம் வழக்கு தொடர்ந்தார். புகார் கொடுத்தவர்களுக்கு பணம் கிடைத்துவிட்டதால் சமரசமாக போக விரும்புவதாக, வழக்கு விசாரணையின்போது, இரு தரப்பிலும் கூறப்பட்ட நிலையில், இதை வழக்கை மட்டும் ரத்து செய்வதாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை குறித்து விசாரணை நடத்த செந்தில்பாலாஜிக்கு பிறப்பிக்கப்பட்ட சம்மனை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அமலாக்கத் துறையின் சம்மனை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனையை மேற்கொண்ட அமலாக்க துறை அதிகாரிகள், உச்சகட்டமாக தலைமை செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜி அலுவலகத்திலும் அதிரடி சோதனையை மேற்கொண்டார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அவருடைய சென்னை வீட்டில் வைத்து துருவி துருவி விசாரணை நடத்திய அமலாக்க துறை அதிகாரிகள்.
இரவு ஒரு மணி வரை செந்தில்பாலாஜியை விடுவதாக இல்லை. அமலாக்க துறை கேட்ட கேள்விகளுக்கு, நியாபகம் இல்லை, தன்னுடைய ஆடிட்டரை கேட்க வேண்டும் என மழுப்பலாக பதில் சொல்லி வந்துள்ளார் செந்தில் பாலாஜி என கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் போக்குவரத்து துறை தொடர்பாக தன்மீது புகார் கொடுத்தவர் யாரென்றே எனக்கு தெரியாது என ஒரே போடாக போட்டு விட்டாராம் செந்தில் பாலாஜி.
அடுக்கடுக்கான ஆதாரங்கள் ஒவ்வொன்றாக அமலாக்க துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் காண்பிக்க தொடங்கியுள்ளார்கள். புகார் கொடுத்த நபர் செந்தில் பாலாஜி வீட்டிற்கு வந்து பி-பணம் கொடுத்த ஆதாரம், செந்தில் பாலாஜி சகோதரர் பேசிய ஆடியோ ஒன்றையும் போட்டு காண்பித்துள்ளார் அமலாக்க துறை அதிகாரிகள்.பதில் சொல்ல முடியாமல் தடுமாறிய செந்தில் பாலாஜி இதெல்லாம் ஜோடிக்கப்பட்டது என ஒரே போடாக போட்டுள்ளார் என கூறப்படுகிறது.
உச்சகட்டமாக புகார் அளித்த நபர்கள் செந்தில் பாலாஜியின் வங்கிக்கணக்கில் 29.55 லட்சம் ரூபாய் பணம் செலுத்திய ஆதாரங்களை காண்பித்த அமலாக்க துறை அதிகாரிகள், இதற்கு என்ன சொல்கிறீர்கள் என கேட்க, பதில் சொல்ல முடியாமல் திணறிய அமைச்சர் செந்தில் பாலாஜியை, நள்ளிரவாகி விட்டது, தொடர்ந்து விசாரணை நடத்த கைது செய்கிறோம் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்து காரில் அழைத்து சென்றனர்.
அப்போது காரில் ஏறிய உடனே செந்தில் பாலாஜி நெஞ்சை பிடித்துக்கொண்டு அய்யோ நெஞ்சு வலிக்கிறது, டாக்டரை கூப்பிடுங்க என அமைச்சர் செந்தில் பாலாஜி காரில் படுத்து கொண்டு கால்களை உதறி அழுது அடம் பிடிக்க, உடனே சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரித்துரைத்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு வரும் 28 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.