விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் வேட்பாளராக களம் இறங்கியதும் அந்த தொகுதி ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது. கடுமையான போட்டி இருக்காது எளிமையாக வெற்றி பெற்று விடலாம் என கனவில் மிதந்து கொண்டிருந்த சிட்டிங் எம்பி மாணிக்கம் தாகூர் கனவெல்லாம் பாலாய் போகும் விதத்தில் அமைத்துள்ளது ராதிகா சரத்குமார் பாஜக சார்பில் அந்த தொகுதியில் போட்டியிடுவது.
ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் பிரச்சாரம் தொடங்கியது முதலே அந்த தொகுதி மக்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்று வருவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக சிட்டிங் எம்பி மாணிக்கம் தாகூர் தொகுதி பக்கமே வரவில்லை, இன்னும் சொல்ல போனால் விருதுநகர் தொகுதி எம்பி பெயரே அந்த தொகுதி மக்கள் பெருமபலனவர்களுக்கு தெரியவில்லை, அந்த அளவுக்கு விருதுநகர் தொகுதி மக்களின் வெறுப்பை சம்பாரித்து வைத்துள்ளார் மாணிக்கம் தாகூர்.
அந்தவகையில் கடந்த தேர்தலில் ஒட்டு போட்டு ஏமார்ந்தது போன்று இம்முறை ஏமார்ந்து விட கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் விருதுநகர் தொகுதி மக்கள், மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க இருக்கும் பிரதமர் மோடியின் வேட்பாளரான ராதிகா சரத்குமார்க்கு வாக்களித்தால் மட்டுமே நம்ம தொகுதி வளம் பெரும் என்பதில் மிக தெளிவாக விருதுநகர் தொகுதி மக்கள் இருப்பதை, ராதிகா சரத்குமாருக்கு அந்த தொகுதி மக்கள் கொடுக்கும் உற்சாக ஆதரவில் காண முடிகிறது.
இந்நிலையில் விருதுநகர் தொகுதியில் உள்ள திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு மக்கள் மத்தியில் எழுந்துள்ள ஆதரவும் வரவேற்பும், எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. கப்பலூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராதிகா சரத்துக்குமார் பிரச்சாரத்தை காண மிக பெரிய அளவில் பெண்கள் மற்றும் தாய் மார்கள் கூட்டம் அலைமோதியது.
பிரச்சரத்தில் உங்களுக்கு சித்தி தெரியுமா என ராதிகா சரத்குமார் கேட்க.? அதற்கு அங்கிருந்து பெண்கள் நீங்கள் ராணியா.? வானியா.? என பதிலுக்கு கேட்க, இப்படி பெண்கள், தாய்மார்கள் மத்தியில் ராதிகா சரத்குமார் செய்த தேர்தல் பரப்புரை கலகலப்பாக இருந்தது. அதனை தொடர்ந்து திருமங்கலம் தேவர் சிலை அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராதிகா சரத்துக்குமார் பேச்சை கேட்க மிக பெரிய அளவில் மக்கள் கூட்டம் கூடியதால் அந்த பகுதி முழுவதும் வாகனங்கள் செல்ல முடியாதபடி ஸ்தம்பித்தது.
அதே போன்று திருமங்கலம் சந்தை பேட்டை என ராதிகா சரத்குமார் திருமங்கலம் பகுதியில் செல்லும் இடமெல்லாம் மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பை பார்க்கும் பொழுது, கடந்த இரண்டு வருடமாக அந்த பகுதியில் பாஜக மாவட்ட தலைவராக இருந்து வரும் சசிகுமாரின் உழைப்புக்கு கிடைத்த வெளிப்பாடு தான் பாஜகவின் இந்த அசுர வளர்ச்சி என்பதை பார்க்க முடித்து. அந்த வகையில் திருமங்கலம் எங்கள் கோட்டை என கொக்கரித்து கொண்டிருந்த இரண்டு திராவிட கட்சிகளுக்கு, இது பாஜகவின் கோட்டை என ராதிகா சரத்குமார் மேற்கொண்ட பிரச்சரத்தில் மூலம் நிரூபித்து காண்பித்துள்ளார் மாவட்ட தலைவர் சசிகுமார்.
இந்நிலையில் ராதிகா சரத்குமாருக்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட சரத்குமார், பேசி கொண்டிருக்கையில் திடீரென செங்கல் ஒன்றை தூக்கி காண்பித்து அமைச்சர் உதயநிதியை பங்கம் செய்யும் விதத்தில் பேசியவர், இந்தியாவில் இருக்கின்ற எய்ம்ஸ் மருத்துவமனையிலேயே மிகச்சிறந்த மருத்துவமனையமாக இருக்கப் போவது விருதுநகர் தொகுதியில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை தான் என பேசிய சரத்குமார்.
மேலும் ஒரு செங்கல் உடன் தான் வருகிறார் உதயநிதி, ஆனால் அந்த செங்கலை எங்கே உருவினார் என்று தெரியவில்லை, உதயநிதி ஸ்டாலின் உங்களுக்கு நான் உத்தரவாதம் கொடுக்கின்றேன் அடுத்த 30 மாதத்திற்குள் விருதுநகர் தொகுதிக்குட்பட்ட தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை பிரதமர் மோடி அவர்களால் திறந்து வைக்கப்படும் சும்மா இந்த செங்கலை உதயநிதி ஸ்டாலின் காட்டிக் கொண்டிருப்பது பிரதமர் மோடிக்கு இழுக்கு அல்ல உதயநிதிக்கு தான் இழுக்கு என அடுத்த 30 மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டும் என சரத்குமார் உத்திரவாதம் அளித்தார்.