மதம் மாற்ற முடியல…வருமானம் இல்லை..!ஒரு கொடிய காலத்தில் இருப்பதாக எஸ்ரா.சர்குணம் வேதனை.!

0
Follow on Google News

வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. இவற்றில் பல நிறுவனங்கள் வெளிநாடுகளில் நிதி பெற்று கொண்டு, மத்திய அரசு திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கும், மதமாற்றங்களுக்கும் அவற்றை பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் இவற்றிற்கு வரும் நிதியை முறைப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் நிதி உதவி பெற்று, தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக பல குற்றச்சாட்டுக்கள் வந்த நிலையில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து, வெளிநாட்டு நன்கொடை நிதி உதவி பெறும் 11,319 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அங்கீகாரத்தை கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பே மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது.

இதன் மூலம் அந்நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவது தடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பிடி இறுகத் தொடங்கியதால், தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி உதவிகளும் குறைய ஆரம்பித்தது. கடந்த 4 ஆண்டுகளில் இந்தத் தொண்டு நிறுவனங்களுக்கு வரும் நிதி உதவியானது சுமார் 40 சதவிகிதம் குறைந்துள்ளதாக பெயின் & கோ (Bain & Co) நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பெயரளவில் தொண்டு நிறுவனங்களை தொடங்கி, அதன் மூலம் வெளிநாட்டு நிதி உதவிகளைப் பெற்று அவற்றை மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டங்களுக்கும், மதமாற்றங்களுக்கும் பயன்படுத்தும் தொண்டு நிறுவனங்களின் மீது நீண்ட காலமாகவே மத்திய அரசின் கழுகுப்பார்வை தொடர்ந்து கொண்டே வந்தவண்ணம் இருந்து வருகிறது. இந்நிலையில் பாதிரியார் எஸ்ரா சற்குணம் நிதி பற்றாக்குறை பற்றி வேதனையுடன் பேசிய வீடியோ ஓன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அதில், கடந்த நான்கு மாதங்களில் நமது தேவாலயங்களில் ஆராதனை நடைபெறவில்லை, அதனால் காணிக்கை வரவில்லை, காணிக்கை வரவில்லை என்றால் ஊழியத்தில் வளர்ச்சி குன்றி தான் இருக்கும், மிஷினரி ஊழியங்களும் அதிகமாக இல்லை, கடந்த நான்கு மாதங்களில் எங்கேயும் ஞானஸ்தானம் (மத மாற்றம் ) நடைபெறவில்லை என்றும், ஆகையால் இது போன்ற கொடிய காலத்தில் தான் நாம் இருக்கிறோம், என பாதிரியார் எஸ்ரா சற்குணம் வேதனையுடன் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.