எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய தேவைக்கு பயன்படுத்தி கொண்டு, தேவை முடிந்ததும் கழட்டி விட்டு விடுவார் என்கிற பேச்சு பரவலாக இருந்து வரும் நிலையில், தன்னுடைய தேவைக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான ஆர். பி .உதயகுமாருக்கும் தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமி சுயரூபம் என்ன என்பது தெரியவந்துள்ளது.
பொதுவாகவே, எடப்பாடி பழனிசாமி க்கு எதிராக இருக்கும் சசிகலா, ஓபிஎஸ், TTV தினகரன் ஆகியோரை சமாளிக்க, அதே சமூகத்தை சேர்ந்த ஆர் பி உதயகுமாரை வைத்து அவர்களுக்கு எதிராக பேட்டி கொடுக்க வைப்பார், ஆர் பி உதய்குமாரும் அதே மாதிரி, ஒரு காலத்தில் சின்னம்மா தான் முதல்வராக வேண்டும் என்று பேசியவர்,கருவாடு மீன் ஆக முடியாது என சசிகலாவை விமர்சனம் செய்தார். இப்படி அதிமுகவில் எடப்பாடிக்கு அடுத்த நிலைக்கு தான் வரவேண்டும் என்பதற்காக எடப்பாடிக்கு ஓவர் விசுவாசத்தை காண்பித்தார் ஆர். பி உதயகுமார்.

இந்த நிலையில் சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக – அதிமுக கூட்டணியை உறுதி செய்யும் வகையில், எடப்பாடி பழனிசாமி உடன் இணைந்து அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி மேடையில் 6 நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. அந்த மேடையில் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் ஏறியுள்ளனர்.
அப்போது இடமில்லை எனக்கூறி கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணியை தனது அருகே அமரவைத்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, ஆர்.பி. உதயகுமாரை மட்டும் மேடையை விட்டு இறக்கச் சொன்னதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் என்கிற முறையில் ஆர் பி உதய்குமாருக்கு மேடையில் இடம் கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால் ஆர் பி உதயகுமாரை அவமானப்படுத்தும் நோக்கில், அவருக்கு மேடையில் இடமில்லை என எடப்பாடி தெரிவித்தது, ஆர் பி உதய்குமார் இதை தனக்கு ஏற்பட்ட மிக பெரிய அவமானாக கருதி , அங்கே ஆர்.பி.உதயகுமார் யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றதாக கூறப்படுகிறது. அதே போன்று செய்தியாளர் சஎடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அமித் ஷாவிற்கு விருந்து வைக்கப்பட்டது. இதில் அதிமுக சார்பில் அ கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் பங்கேற்ற நிலையில், ஆர்.பி.உதயகுமார் பங்கேற்கவில்லை எனக்கூறப்படுகிறது.
ஏற்கனவே தென்மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்க கூடிய முக்குலத்தோர் சமூகத்தினரை ஓரம் கட்டும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றசாட்டுகள் எழுந்து வந்த நிலையில், டிடிவி தினகரன், விகே சசிகலா , ஓபிஎஸ் வரிசையில் தற்பொழுது முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் ஆர்.பி.உதயகுமாரை எடப்பாடி பழனிசாமி ஓரங்கட்டியதாக சலசலப்பு எழுந்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா உடன் கூட்டணி அறிவிப்பு நடந்த மேடையில், எடப்பாடி பழனிச்சாமி அவர் அருகில் அமர வைத்த கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி இருவருமே கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அதில் ஒருவருக்கு பதில் ஆர் பி உதய்குமாருக்கு மேடையில் அமர வாய்ப்பு கொடுத்திருக்கலாம், ஆனால் ஆர் பி உதயகுமார் அதிமுக எதிர்க்கட்சி துணை தலைவராக இருந்தாலும் கூட அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் டெல்லிக்கு செல்லும் குழுவில் அவருக்கு ஒரு முறை கூட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
அந்த வகையில் எடப்பாடி பழனிசாமிக்கு இனி ஆர் பி உதயகுமார் தேவை என்று கருதி இருந்தால் மேடையில் அமர இடம் கொடுத்து இருப்பார், ஆனால் அவருக்கு இனி இவர் தேவை இல்லை என கருதியதால் மேடையில் இடமில்லை என கழட்டி விட்டு விட்டார் என்றும், காரியம் முடிந்ததும் எடப்பாடி கழட்டி விட கூடியவர் தானே என்கிறது அரசியல் வட்டாரங்கள்.