ஈவேரா பிம்பத்தை உடைக்காமல் திராவிட அட்ஜெஸ்ட்மென்ட் அரசியலா.? பாஜகவில் இணைவது குறித்து மரித்தாஸ் நிலைப்பாடு இது தான்..

0
Follow on Google News

பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் பாஜகவில் இணைவது குறித்து மேல்மட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரித்ததில், எழுத்தாளர் மரித்தாஸ் தனது தரப்பில் சில விசயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளார் என கூறப்படுகிறது, அதில் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் நலத்திட்டங்கள் சென்றடைந்த மக்களுக்கு அது நரேந்திர மோடி அவர்கள் திட்டம் என்பதை எடுத்துரைத்து. மேலும் நரேந்திரமோடியின் மக்கள் நல திட்டங்கள் பற்றி மக்களிடம் பிரச்சாரம் செய்து முதல் நிலையில் நரேந்திர மோடி அவர்களை ஏற்றுக் கொள்ள வைப்பது முக்கிய பணி.

கட்சிக்குள் சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் போகலாம் , ஆனால் சித்தாந்தவாதிகள் தான் கட்சியை தாங்கி பிடிக்கிறார்கள். எனவே கட்சி உறுப்பினர் சேர்க்கை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவுக்கு RSS , ABVP போன்ற சிந்தாந்தம் அடிப்படையில் உள்ள அமைப்புகளின் வளர்ச்சி முக்கியம். ஆனால் அதில் அடிப்படைவாதிகள் அல்லாமல் இளைஞர்கள் ஏற்கும் விதமான நகர்வு இருக்க வேண்டும் எனக் மரித்தாஸ் கருதுவதாக கூறப்படுகிறது.

மேலும், ஒவ்வொரு பகுதியிலும் அந்த அந்த பகுதியில் உள்ள திமுக முக்கிய பிரமுகரை எதிர்த்து உள்ளூர் அரசியலில் தீவிரமாகச் செயலாற்றுவதும் திமுகவிற்கு மாற்று பாஜக என்ற நிலைக்கு உயர்த்துவதுமே முக்கியப்பணி. எனவே ஸ்டாலின் , திமுக என்று மேல்மட்ட எதிர்ப்பு தாண்டி அந்த அந்த பகுதி மக்களுக்கான தீவிர அரசியல் போராட்டங்களை திமுகவிற்கு எதிராக நடத்த வேண்டும். பூத் கமிட்டி அளவில் வழுவான கட்டமைப்பை உருவாக்க முயல வேண்டும்.

போஸ்டர் அடிப்பது அதில் புகைப்படம் வருவது அல்ல பிரச்சனை, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் அதற்கு பூத் ஒவ்வொன்றையும் கைப்பற்ற வேண்டும். அதற்காகத் தெளிவோடு அரசியல் நடத்த வேண்டும்.லோக்கல் அரசியலில் எவரெல்லாம் இது என் தொகுதி என் வட்டம் என் பகுதி என்று உள்ளதோ அது எல்லாம் பாஜகவின் கோட்டையாக மாற்றக் கடுமையாக அரசியலை மோதலை மேற்கொள்ள வேண்டும். அந்த அந்த பகுதிகளில் தலைவர்களை உருவாக்காமல் சக்தி மிக்க தலைமையை லோக்கல் அரசியலில் உருவாக்காமல் வெற்றி இல்லை. அது தான் தன் வேலை எனக் கருதுகிறார் மரித்தாஸ்.

இப்படி வேலை எதுவும் இல்லாமல் அரசியல் உள்ளே வருவது வீண் என்று மரித்தாஸ் நினைப்பதாக கூறப்படுகிறது, அப்படி ஒரு வாய்ப்பு இல்லை என்றால் அதற்கு அரசியலுக்கு வராமல் வெளியிலிருந்து தற்போது போல் தொடர்ந்து தேசியவாதியாகவே இயங்குவது நிம்மதி என மரித்தாஸ் கருதுகிறார். மேலும் மாரிதாஸ் தரப்பில் உள்ள தீர்மானமான விசயம் “ஈவே ராமசாமி பிம்பத்தை உடைத்து அரசியல் செய்யாமல் திராவிட அட்ஜெஸ்ட்மென்ட் அரசியல் செய்ய விருப்பம் இல்லை.

ஈவே ராமசாமி பிம்பத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்பதில் எழுத்தாளர் மரித்தாஸ் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. கிடைக்கும் தகவல்படி சுதந்திரமாக போதிய அதிகாரத்தோடு உரியப் பொறுப்புகள் கொடுத்து செயலாக்கத்தில் தமிழக அரசியல் களத்தில் எழுத்தாளர் மரித்தாஸை களத்தில் இறங்குவதற்கு பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.