நடைபெற்று கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக தேர்தல் களம் நிலவரம், இரண்டு திராவிட கட்சிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் விதத்தில் தேர்தல் களம் பாஜகவுக்கு சாதகமா மாறி வருகிறது. சுமார் 15 தொகுதிகள் வரை பாஜகவுக்கு வெற்றி பெரும் வாய்ப்பு உள்ளது என தமிழக தேர்தல் களம் குறித்த கருத்து கணிப்பு தெரிவித்து வரும் நிலையில், சுமார் 11 தொகுதிகளில் பாஜக கூட்டணி உறுதியாக வெற்றி பெரும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக துரைமுருகன் மகன் போட்டியிடுகிறார், அவரை எதிர்த்து பாஜக கூட்டணி கட்சியின் சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஏசி சண்முகம் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வென்ற துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தத்துக்கு கடும் போட்டியை கொடுத்தவர், கடந்த 2019 தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது கடும் இழுபறிக்கு மத்தியில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் கடந்த 2019 தேர்தலில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.
அந்த வகையில் வெற்றியை தொட்டுவிடும் தூரத்திற்கு சென்று வெற்றியை கடந்த தேர்தலில் வேலூர் தொகுதியில் நழுவ விட்டவர் ஏசி சண்முகம். தற்பொழுது பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் மீண்டும் வேலூர் தொகுதியில் தற்பொழுது போட்டியிடும் ஏ.சி.சண்முகம் மிக பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளதை வேலூர் தொகுதியில் பார்க்க முடிகிறது.
அதாவது பாஜக வெற்றி பெரும் டாப் தொகுதிகளில் வேலூர் தொகுதி இடம்பெற்றுள்ளது. மேலும் வேலூர் தொகுதியில் பாஜக கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் சுமார் 40 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார் என உளவு துறை ரிப்போர்ட் பாஜக தலைமைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இம்முறை துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் பாஜக வேட்பாளரிடம் தோல்வியை தழுவுவார் என்கிறது கருத்து கணிப்புகள்.
இதே போன்று நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் மிக பெரிய சவாலாக இந்த தொகுதியில் போட்டியிடும் இரண்டு திராவிட கட்சிகளுக்கும் இருந்து வருகிறார். இதில் இரண்டாவது இடத்தை பிடிக்க போவது யார் என்கிற போட்டியில், திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் கொங்கு மக்கள் கட்சி வேட்பாளர் மற்றும் அதிமுக வேட்பாளர் இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது.
அந்த வகையில் நாமக்கல் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் கே.பி.ராமலிங்கம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதை பார்க்க முடிகிறது. மேலும் திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் சூழல் தான் நாமக்கல் தொகுதியில் நிலவி வருகிறது. நாமக்கல் போன்று, கள்ளக்குறிச்சி, விருதுநகர், நீலகிரி என சுமார் 6 தொகுதிகள் வரை திமுக வேட்பாளர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படுவார்கள் என்கிறது தேர்தல் கள நிலவரம்.