போன் போட்ட ரஜினிகாந்த்… கோபத்தில் கண்டபடி திட்டி போனை கட் செய்த டீ ஆர்.. எதற்கு தெறியுமா.?

0
Follow on Google News

நடிகர், பாடகர், இசையமைப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருபவர் டி.ராஜேந்தர். 1980-களில் முன்னணி இயக்குனராக வலம் வந்த டி.ராஜேந்தர், ஒரு தலை ராகம், என் தங்கை கல்யாணி, ரயில் பயணங்களில், உயிருள்ளவரை உஷா போன்ற பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து நட்சத்திர இயக்குனராக வலம் வந்தார்.

குறிப்பாக இவர் படங்களில் ஆபாச காட்சிகள் எதுவும் இருக்காது இதனால் பேமிலி ஆடியன்ஸின் மனம்கவர்ந்த இயக்குனராகவும் டி.ஆர். விளங்கினார். டி.ராஜேந்தருக்கு உஷா என்கிற மனைவி உள்ளார். இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் மூத்த மகனான சிம்பு இளம் வயதில் இருந்தே சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இரண்டாவது மகன் குரலரசன் இசையமைப்பாளராக சில படங்களில் பணியாற்றினார்.

அதன்பின் சினிமா செட் ஆகாததால் தற்போது சொந்தமாக பிசினஸ் செய்து வருகிறார் குரலரசன். சிம்புவின் தங்கை இலக்கியாவும் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும், டி.ஆர்.ராஜேந்திரனுக்கும் இடையே நடந்த மோதல் குறித்து பிரபல சினிமா பத்திரிகையாளர், இது குறித்து தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியுள்ளார், அதில் “ நான் அப்போது டி ஆர் ராஜேந்திரிடம் வேலை செய்து கொண்டிருந்தேன்.

அப்போது அவர் டெரர் பீஸாக இருந்தார். இப்போது காமெடி பீஸாக மாறிவிட்டார். அன்று டிஆர் என்று சொன்னாலே, அனைவருக்கும் தெறி பேச்சு தான் நினைவுக்கு வரும். குறிப்பாக அரசியல் வட்டாரங்களில் அவருக்கு முக்கியத்துவமும், மரியாதையும் அதிகம் இருந்தது. அந்த சமயத்தில் ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும், அவர் படப்பிடிப்பில் இருந்து அப்படியே வீட்டிற்கு வந்து விட்டதாகவும் செய்திகள் வந்து கொண்டிருந்தன.

இதையடுத்து அவரது உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக, டி ஆர் ராஜேந்தர் அப்போது எங்களுடன் இருந்த வி கே சுந்தரை அழைத்து, ரஜினிக்கு போன் போடு என்று சொன்னார். இதனையடுத்து போன் டைரக்ட்ரியைப் பார்த்து ரஜினிக்கு போன் செய்தார் சுந்தர். கால் சென்றது; எதிர் முனையில் ஒருவர் போனை எடுத்தார்” என்றார். “அப்போது அவரிடம் வி கே சுந்தர், நாங்கள் டி ராஜேந்தர் வீட்டிலிருந்து பேசுகிறோம்.

ராஜேந்தர் ரஜினியுடன் பேச விருப்பப்படுகிறார் என்று சொன்னார். இதனைக் கேட்ட அவர், நீங்கள் போனை வையுங்கள். உங்களை திருப்பி அழைக்கிறோம் என்று சொன்னார். அவர் அப்படி சொன்னதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதாவது, போன் டைரக்டரியிலிருந்து ரஜினி வீட்டின் நம்பரை எடுக்கும் ரசிகர்கள் பலர், இன்னார் வீட்டில் இருந்து பேசுகிறோம் என்று பொய் கூறி, ரஜினியிடம் போன் சென்ற உடன், நான் உங்கள் ரசிகன் பேசுகிறேன் என்று சொல்லி, நலம் விசாரிப்பர்.

இதனை தவிர்ப்பதற்காகவே அந்த ஏற்பாடு. கொஞ்ச நேரத்தில் ஒரு போன் கால் வந்தது. அந்த போன் காலில் பேசியவர், நாங்கள் ஏவிஎம் நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம் சரவணன் சார் உங்களிடம் பேச வேண்டுமாம் என்று சொன்னார். இதனையடுத்து பதறிப்போன ராஜேந்தர் போனை வாங்க, மறுமுனையில் போன் ரஜினியின் கைக்கு சென்றது. ஆம், அந்த போன் கால் ரஜினி வீட்டில் இருந்து வந்ததுதான்.

ராஜேந்தர் சார் சொல்லுங்கள் என்று கேட்டவுடன், எதிர்முனையில் இருந்த ரஜினி சொல்லுங்கள் ராஜேந்தர் என்று கேட்டார். இதைக் கேட்ட டி ராஜேந்திருக்கு டென்ஷன் ஆகிவிட்டது எதற்கு ஏவிஎம் ஸ்டுடியோவில் இருந்து பேசுறீங்க, இப்படியெல்லாம் செய்யக்கூடாது ரஜினி என்று சொல்லி, பயங்கரமாக கத்தி, போனை வைத்து விட்டார். அதன் பின்னர் கிட்டத்தட்ட நான்கு முறை ரஜினி தரப்பில் இருந்து அழைப்பு வந்தது. பின்னர் மனம் இறங்கி எடுத்த ராஜேந்தர், நலம் விசாரிக்க, இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.” என்று பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here