ஒரு பொய்யை நியாய படுத்த மீண்டும் பொய் சொல்லி மாட்டிக்கொண்ட பெரியாரிஸ்ட் அருள்மொழி.! வீடியோ உள்ளே..

0
Follow on Google News

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் மற்றும் திராவிட கழகத்தை சேர்ந்த அருள்மொழி ஆகியோர் இடையே சில மாதங்களுக்கு முன் காரசார விவாதம் ஓன்று நடைபெற்றது, அதில் அருள்மொழி பேசுகையில் இராமாயணத்தில், சம்பூகன் தவம் செய்வதால் ஒரு ஏழை பிராமணர் குழந்தை இறந்துவிட்டது, அப்போது அந்த குழந்தையை தூக்கிட்டு வந்து ராமனிடம் உன்னுடைய ஆட்சியில் தர்மம் கெட்டுவிட்டது என நாரதர் கூறுவதாக பேசிய அருள்மொழி.

சூத்திரர்கள் தவம் செய்வதால் வர்ண தர்மம் கெட்டு போய்விட்டது, சூத்திரர்கள் கலிகாலத்தில் தான் படிக்க வேண்டும் என நாரதர் விளக்கம் கொடுத்தது. தவம் செய்து கொண்டிருந்த சூத்திரர் சம்பூகனை தனது வாளால் ராமன் தலையை சீவியதாக அருள்மொழி பேசினார், இதற்கு மறுப்பு தெரிவித்து பேசிய பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன், சம்பூகன் கதை எந்த இராமாயணத்தில் இருக்கிறது என்பதை அருள்மொழி விளக்கம் கொடுக்க வேண்டும் என கூறிய பேராசிரியர்.

வால்மீகி ராமாயணத்தில் சம்பூகனை பற்றிய கதையே இல்லை, அதை தமிழ் படுத்திய கம்பன் எழுதிய ராமாயணத்திலும் சம்பூகன் பற்றிய கதை இல்லை, அதை ஹிந்தியில் துளசிதாசர் எழுதிய ராமாயணத்திலும் சம்பூகன் கதை இல்லை, ஆனால் திராவிட கழகம் வால்மீகி ராமாயணம் என்ற பெயரில் சம்பூகன் கதையை எழுதியுள்ளனர், இல்லாத ஒரு சம்பவத்தை இட்டுக்கட்டி எழுதி பொய் பிரச்சாரம் செய்த சம்பவம் இது என குறிப்பிட்ட பேராசிரியர்.

குகனை பார்த்து உன்னுடன் ஐவர் ஆனோம் என கூறி தன்னுடைய தம்பியாக ஏற்று கொண்ட ராமரை சூத்திரர்களுக்கு எதிரானவர் என்று கூறுவது,அறிவு நாணயம் இல்லாத செயல் என பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் பதிலடி கொடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் மிக பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டு அருள்மொழி இதுகுறித்து மேடையில் பேசுகையில்.

பாஜக முக்கிய தலைவராக இருக்கக்கூடிய பேராசிரியர் ஸ்ரீநிவாசன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ஏககலைவன் கதையே இராமாயணத்தில் கிடையாது என பேசியதாகவும், ஆனால் அதற்கு ஆதாரத்துடன் தான் விளக்கம் குடுத்ததை எடிட் செய்து, பதில் சொல்ல திணறிய அருள்மொழி என திட்டமிட்டு சிலர் அந்த வீடியோ பரப்பி வருவதாக தெரிவித்தார். ஆனால் தொலைக்காட்சி விவாத நிகச்சியில் நடந்தது சம்பூகன் பற்றிய விவாதம், அருள்மொழி மேடையில் ஏகலைவன் பற்றிய விவாதம் என்று பொய்யான தகவலை தெரிவித்து வசமாக சிக்கி கொண்டார்.

மேலும் ஏகலைவன் மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரம், ஆனால் அருள்மொழி இராமாயணம் என்று குறிப்பிடுவது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது, ஏற்கனவே தொலைகாட்சி விவாதத்தில் சம்பூகனை தனது வாளால் ராமர் சீவினர் என அருள்மொழி பேசியதற்கு, ராமரின் ஆயுதம் வில் என்றும் அவர் எப்போதும் வில்லுடன் தான் காட்சி தரக்கூடியவர், வாளை கையில் ஏத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை என இதற்கு முன் பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன் விளக்கம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.