மதுரை வருகிறார் ராஜ்நாத் சிங்… அலறும் திமுக அட்ரஸ் இல்லாமல் கதறும் அதிமுக… தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்திய திருமாறன் ஜி…

0
Follow on Google News

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ள, நிலையில் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது, யார் யார் எந்தெந்த கூட்டணி, எந்தந்த கட்சிகளுக்கு இடையில் நேரடி போட்டி என்கிற விவாதம் அனல் பறந்து கொண்டிருக்கையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளுக்கு கடந்த முறையை விட இந்த முறை குறைந்த தொகுதிகள் கொடுத்தாலும், கொடுத்ததை வாங்கி கொண்டு எங்களுக்கு எத்தனை தொகுதியில் போட்டியிடுகிறோம் என்பது முக்கியம் இல்லை, ஒற்றுமையாக இருந்த பாஜகவை வீழ்த்துவது தான் எங்கள் லட்சியம் என நரம்பு புடைக்க பேசிவிட்டு திமுக கூட்டணியிலே இருந்து விடுவோம் என்கிற மனநிலையில் தான் திமுகவில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சிகள் இருந்து வருவதை பார்க்க முடிகிறது.

அந்த வகையில் திமுகவை எதிர்க்கும் நேரடி போட்டியாளர் யார்.? என்கிற சந்தேகத்துக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில், வலுவான கூட்டணியை அமைத்து தேர்தல் களம் காண தயார் நிலையில் உள்ளது பாஜக, குறிப்பாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் தென்மாவட்ட அரசியல் களம் மிக பெரிய திருப்புமுனையாக தமிழக அரசியல் வரலாற்றில் இடம் பெற இருக்கிறது.

அதிமுக பல துண்டுகளாக பிரிந்த பிறகு, தென்மாவட்டத்தில் அதிமுக சல்லி சல்லியாக உடைந்து அட்ராஸ் இல்லாமல் கரைந்து கொண்டிருப்பதை, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நடந்தும் பொது கூட்டங்களில் காலி சேர்கள் மத்தியில் பேசி வருவது உணர்த்துகிறது. இந்நிலையில் பாஜக உடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை இனி அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைத்து தேர்தலை சிந்திப்போம் என எடப்பாடி பழனிசாமி கூட்டணி பேச்சவார்த்தைக்கு வாங்க வாங்க என கதவை திறந்து வைத்தும், சொல்லும்படியாக எந்த ஒரு கட்சியும் எடப்பாடி தலைமையை சீண்ட கூட இல்லை.

இப்படி ஆளில்லாத கடையில் டீ ஆற்றுவது போன்று உள்ளது எடப்பாடி பழனிச்சாமியின் இன்றைய அரசியல் நிலை. இந்த நிலையில். பாஜக தலைமையில் குறிப்பாக தென் மாவட்டத்தில் வலுவான கூட்டணி அஸ்திவாரத்தை போட்டுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை, இந்நிலையில் வரும் பிப்ரவரி 27 செவ்வாய் கிழமை மதுரை ஒத்தக்கடை அருகில் நடைபெற இருக்கும் தென் இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் நிறுவனர் திருமாறன் ஜி ஏற்பாட்டில் நடைபெறும் அக்கட்சியின் தேச ஒற்றுமை தென் மண்டல மாநாட்டில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.

இந்த மாநாட்டில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், அமமுக பொதுச் செயலாளர் TTV தினகரன் என முக்கிய கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்க இருக்கும் நிலையில், தென் மாவட்டத்தின் தலைநகரான மதுரையில் இருந்து நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரட்சரத்தை தொடங்குகிறது பாஜக.

அந்த வகையில் வரும் நாடாளுமன்ற தேர்தல் களம் என்பது திமுக – பாஜக கூட்டணி என நேரடி போட்டி நிலவ தொடங்கியுள்ள நிலையில் அதிமுக என்கிற கட்சி அட்ரெஸ் இல்லாமல் சென்று கொண்டிருக்க, தென்மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள், எப்படி தென் மாவட்டத்தில் திண்டுக்கல் இடை தேர்தல் எம்ஜி ஆர் க்கு திருப்பு முனையை ஏற்படுத்தி தந்ததோ அதே போன்று வரும் நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு தமிழகத்தில் மிக பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தி தரும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.