எதிர்க்கட்சி தலைவர் பதவி… கை கட்டி நின்ற ஓபிஎஸ்..! கை கழுவிய டெல்லி பாஜக தலைமை.!

0
Follow on Google News

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி 75 தொகுதிகளை கைப்பற்றி இருந்தது, இதில் பாமக 5 தொகுதிகளும், பாஜக தொகுதிகளும், அதிமுக மட்டும் 66 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது, திமுக அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே 5.67 சதவிகித வாக்கு வித்தியாசம் இருந்தது, இந்நிலையில் கடந்து 7ம் தேதி திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்று கொண்டார், அன்றே அதிமுகவில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் முடிவுக்கு பின் அதிமுகவின் எதிர் கட்சி தலைவராக தன்னை அறிவிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார் ஓபிஎஸ் , அந்த வகையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி எதிர்கட்சி தலைவராக முன்னிறுத்திய போது, அதற்கு கடும் எதிப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஓபிஎஸ், இந்த வாக்குவாதம் கடுமையானதும் வேறு வழியின்றி 10ம் தேதி கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த இடைப்பட்ட இரண்டு நாட்களை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள நினைத்த ஓபிஎஸ், அதற்கான முயற்சியில் ஈடுபட்டார், ஜெயலலிதா மறைவுக்கு பின் முதல்வராக இருந்த ஓபிஎஸ் பதவியை சசிகலா பறித்த போது டெல்லி பாஜகவுக்கு நெருக்கமான ஆடிட்டர் குருமூர்த்தியை தொடர்பு கொண்ட ஓபிஎஸ் அவருடைய ஆலோசனைபடி தர்மயுத்தம் தொடங்கினர். இதன் பின்பு கடும் போராட்டத்துக்கு பின் அதிமுக ஒருங்கிணைப்பாளரானர்,

இதே போன்று எதிர்கட்சி தலைவர் விவகாரத்தில் டெல்லி பாஜக உதவியை பெற முயற்சி செய்துள்ளார், இந்த தகவல் டெல்லி பாஜக தலைமைக்கு சென்றுள்ளது, ஆனால் அவர்களோ இது உங்க உட்கட்சி விவகாரம் இதில் நாங்க தலையிட முடியாது என ஓபிஎஸ் க்கு தகவல் அனுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து தனக்கு ஆதரவாக யாரும் இல்லை என்பதை உணர்ந்த ஓபிஎஸ், சதுர்த்தியமாக எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த முன்னால் சபாநாயகர் தனபாலை எதிர்கட்சி தலைவராக முன்னிறுத்த முயன்றார்.

ஆனால் 66 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் ஓபிஎஸ் க்கு ஆதரவாக ஒருவர் கூட இல்லை என்பதை உணர்ந்த தனபால் இதில் தனக்கு விருப்பம் இல்லை என ஓபிஎஸ் யிடம் தெரிவித்துள்ளார், இதன் பின்பு 10ம் தேதி நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவராக தேர்தெடுக்கப்பட்டார், இதனை தொடர்ந்து கடும் இழுபறியில் நீடித்த எதிர்க்கட்சி தலைவருக்கான தேர்வு முடிவுக்கு வந்தது குறிப்பிடதக்கது.