தமிழகத்தின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி வி கணேசனின் மனைவி பவானி அவர்கள் இன்று இயற்கை எய்தியுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூரைச் சேர்ந்தவர் சி வி கணேசன். இவர் நடந்த சட்டமன்ற தேர்தலில் திட்டக்குடி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.
இதையடுத்து உருவாக்கப்பட்ட அமைச்சரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவரின் மனைவி பவானி இன்று இயற்கை எய்தினார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் நான்கு மகள்கள் உள்ளனர். அமைச்சரின் மனைவி மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.