சமீபத்தில் பத்திர பதிவுதுறை குறித்து ஊடகம் ஒன்றில் வெளியான செய்தியில், அமைச்சர் மூர்த்தி அங்கம் வகிக்கும் பத்திரப்பதிவுத்துறை சம்பந்தமாக செய்தி இடம் பெற்று இருந்தது. அதில் வரியை குறைத்து மதிப்பிடுவதால் பல நூறு கோடி வருவாய் இலக்கும் ஆபத்து, பல கோடி பேரம் பேசிய சார் பதிவாளர் அதிரடி மாற்றம் என்கின்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.
அதாவது 50 சென்னை அம்பத்தூரில் tata நிறுவனத்தின் டிசிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக 17.22 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை செயற்கை நுண்ணறிவு தரவுகளை வைத்திருக்கும் நிறுவனத்திற்கு 2000 கோடிக்கு மேல் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது நிலத்திற்கு சொந்தமான டாடா நிறுவனத்தின் TCS நிறுவனம், இதற்காக வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தை அணுகி உள்ளனர்.

நிலத்தின் மதிப்பை சார் பதிவாளர் அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து, இந்த நிலம் குறித்து வில்லிவாக்கம் சார் சார்பதிவாளர் மாவட்ட பதிவாளருக்கு அறிக்கை கொடுத்துள்ளார். அவர்தான் மதிப்பின் நிர்ணயம் செய்யக்கூடிய அதிகாரம் படைத்தவர், இந்த நிலையில் சார் பதிவாளர் டாட்டா நிறுவனத்திடம் லஞ்சம் கேட்டதாகவும் , இந்த லஞ்சம் கேட்கும் விவகாரம் தெரிய வந்ததும்,
அமைச்சர் மூர்த்தி, அந்த துறையைச் சார்ந்த செயலாளர், பதிவுத்துறை தலைவராகியோர், இது குறித்து விசாரணை நடத்தி, வில்லிவாக்கம் சார் பதிவாளர் திருநெல்வேலிக்கு அதிரடியாக மாற்றி உத்தர விட்டதாகவும் இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், மேலும் சில அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும், அவர்களையும் மாற்ற அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளதாக ஒரு செய்தி சமீபத்தில் வெளியானது.
ஆனால் இந்த விவகாரத்தில் டாட்டா நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 17 ஏக்கர் நிலத்திற்கு , ஒரு ஏக்கருக்கு 1 கோடி ரூபாய் என 17 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டு சார் பதிவாளர் பேரம் பேசியதாக திடுக்கிடும் ஒரு தகவலை வெளியிட்ட முக்கிய பத்திரிகையாளர் ஒருவர், ஒரு சார் பதிவாளர் 17 கோடி லஞ்சம் கேட்பது என்பது நிச்சயம் சாத்தியம் இல்லை என சுட்டிக்காட்டும் அந்த அரசியல் விமர்சகர் .
அதுவும் மிகப்பெரிய நிறுவனமான டிசிஎஸ் இடம் எப்படி கேட்க முடியும் என்று சந்தேகம் எழுந்துள்ள நிலையில் , அந்த சார்பதிவாளர் சுமார் 17 கோடி வரை லஞ்சம் பேரம் பேசியது நிச்சயம் அவருக்கு கேட்டிருக்க மாட்டார் அவருக்கு மேலே இருக்கும் ஒருவருக்கு காப்பம் கட்டுவதற்கு தான் நிச்சயம் அவர் சுமார் 17 கோடி வரை லஞ்சமாக பேரம் பேசி இருப்பார் என்று தெரிவிக்கும் அந்த அரசியல் வட்டாரங்கள்.
ஒரு வேலை அந்த சார் பதிவாளர், பத்திரப்பதிவு த்துறை அமைச்சராக இருக்கக்கூடிய மூர்த்திக்கு கொடுப்பதற்காக இந்த லஞ்சம் பணம் பேசப்பட்டிருக்கலாம் என்றும் சதேகத்தை எழுப்பும் அரசியல் விமர்சகர்கள், மேலும் தமிழ்நாட்டிலேயே அதிகம் சம்பாதிக்கக்கூடிய அமைச்சர்களின் செந்தில் பாலாஜியை ஓவர் டேக் செய்துவிட்டார் மூர்த்தி என்றும் குறிப்பிடுகிறார்கள்.
இந்த நிலையில் இன்டர்நேஷனல் நிறுவனமான டாட்டா நிறுவனத்திடம் லஞ்சம் கேட்ட விவகாரத்தை டாட்டா நிறுவனம் நேரடியாக மத்திய அரசு கவனத்துக்கு எடுத்து சென்றதாகவும், இது பிரதமர் மோடியின் கவனத்துக்கு சென்றுள்ளதாகவும் கூற படுகிறது. மேலும் ஏற்கனவே பத்திரப்பதிவு துறை அமைச்சர் மற்றும் அந்த துறையை சேர்ந்தவர்கள் அமலாக்க துறை ரேடாரில் தீவிரமாக கண்காணித்து வருவதாக கூறப்படும் நிலையில், எந்த நேரமும் பத்திரப்பதிவு துறை சம்பந்தமாக அமலாக்க துறை களத்தில் இறங்கலாம் என்கிற பரபரப்பு நீடித்து வருகிறது.