பிரசன்னாவை ஓரம் கட்டுங்கள், ராஜிவ் காந்திக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.! திமுக தலைமை அதிரடி உத்தரவு.! சோகத்தில் முடங்கிய பிரசன்னா.!

0
Follow on Google News

நாம் தமிழர் கட்சியில் முக்கிய பதவி வகித்த கல்யாணசுந்தரம், மற்றும் ராஜிவ் காந்தி ஆகிய இருவரும் சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அந்த கட்சியில் இருந்து விலகினார்கள், கல்யாணசுந்தரம் மற்றும் ராஜிவ் காந்தி இருவரும் சிறந்த பேச்சாளர்கள், தொலைக்காட்சி விவாதங்களில் அவர்களின் வாதங்களை திறன்பட எடுத்து வைக்க கூடிய இருவரும் நாகரீகத்துடன் பேசக்கூடியவர்கள்.

இந்நிலையில் கல்யாணசுந்தரம் அதிமுகவில் இணைந்தார், அவரை தொடர்ந்து ராஜீவ்காந்தி திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்து கொண்டார், ராஜிவ்காந்தி திமுகவில் இணைந்த பின்பு திமுக தலைமையிடம் இருந்து அணைத்து மாவட்டத்துக்கு ஒரு தகவல் சென்றுள்ளது, அதில் இனி வரும் பொது கூட்டங்களில் பிரசன்னாவுக்கு பதில் ராஜிவ் காந்தியை பேச அழையுங்கள் என்றும் மேலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் பிரசன்னாவை ஓரம் கட்டிவிட்டு ராஜிவ்காந்திக்கு வாய்ப்பு கொடுக்க திமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் பின்னணி குறித்து விசாரித்ததில் பிரசன்னா தொடர்ந்து திமுக சார்பில் தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் பொது கூட்டங்களில் பேசினால் திமுகவுக்கு விழும் ஓட்டுகள் கூட விழாமல் சென்று விடும், மேலும் பொது கூட்டங்களில் திமுகவினர் மத்தியில் பிரசன்னா பேசினால் கூட அவருடைய பேச்சுக்களை பாஜக மற்றும் அதிமுகவினர் கூட்டத்தில் ஊடுருவி வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி விடுவது திமுகவுக்கு எதிராக அமைந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழக தேர்தல் களம் முற்றிலும் தற்போது மாறியுள்ளதை திமுக தலைமை உணர்ந்துள்ளது, இனிவரும் காலங்களில் நாத்திகம், பகுத்தறிவு போன்ற பெரியார் கொள்கைகளை பேசி வாக்கு வாங்க முடியாது என உணர்ந்த திமுக தலைமை, சிறுபான்மை வாக்குகளை பெற பெருபான்மை இந்துக்கள் பின்பற்றும் சமய பழக்கங்கள் மற்றும் அவர்கள் வழிபட கூடிய இந்து கடவுள்களை இழிவாக பேசினால், திமுகவுக்கு எதிராக பெரும்பாண்மை இந்துக்கள் கடுமையாக கொந்தளிக்கும் வகையில் தமிழக இந்துக்கள் எழுச்சி பெற்றுள்ளதை திமுக தலைமை உணர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து திமுக பேச்சாளர் பிரசன்னா கடந்த கலங்களில் பேசிய அநாகரிகமான பேசுச்சுகள் அடங்கிய விடீயோக்களை எடிட் செய்து , திமுகவின் லட்சணத்தை பாருங்கள் என பாஜக, அதிமுக போன்ற கட்சிகள் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், இனி வரும் காலங்களில் பிரசன்னா பேசினால் அது திமுகவுக்கு எதிரான பிரச்சாரமாக அமையும் என்பதை உணர்ந்த திமுக தலைமை, இனி திமுகவுக்கு தேவையில்லா ஆணி பிரசன்னா என்பதை புரிந்துகொண்ட வரும் தொலைக்காட்சி விவாதம் மற்றும் பொதுக்கூட்டங்களில் பிரசன்னாவுக்கு பதில் ராஜிவ்காந்தியை முன்னிறுத்த திமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்த பிரசன்னா, நான் தேவையில்லாத ஆணியா என்று, நண்பர்களிடம் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளதாக திமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .