நீதிபதி அதிரடி உத்தரவு… மீண்டும் செந்தில்பாலாஜியை கைது செய்யும் அமலாக்க துறை…

0
Follow on Google News

சமீபத்தில் டாஸ்மாக் நிறுவனங்களில் அமலாக்கத்துறை நடத்த சோதனைக்கு பின்பு, அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்ட விரோதமானது என்றும், அமலாக்க துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்கள் செல்லாது என்றும், மேலும் இது தொடர்பாக விசாரணையை அமலாக்கத்துறை தொடரக்கூடாது என்றும் தமிழக அரசின் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த மனு குறித்து அமலாக்கத்துறை விளக்கம் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டது மட்டுமில்லாமல், அமலாக்கத் துறையினர் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டனர். இந்த நிலையில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்யவிருந்த தேதியில் அந்த வழக்கை விசாரித்து வந்த இரண்டு நீதிபதிகளும் இந்த வழக்கில் இருந்து விலகுவதாக திடீரென்று அறிவித்தனர்.

இதனை தொடர்ந்து இந்த வழக்கை நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியன் மற்றும் ராஜசேகர் ஆகியோர் அமர்வுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் மனு தொடர்பாக விளக்கமனு தாக்கல் செய்த அமலாக்கத்துறை, சுமார் 60 மணி நேரம் இந்த சோதனையை மேற்கொண்டு பல ஆவணங்களை கைப்பற்றியதாக குறிப்பிட்ட அமலாக்கத் துறை தரப்பு. உயர் அதிகாரிகள் விசாகன் மற்றும் சங்கீதா இவர்கள் இருவருடைய தொலைபேசிகளையும் நாங்கள் கைப்பற்றிஅதிலிருந்து பல ஆதாரங்களை சேகரித்துள்ளோம்.

இப்படி தொடர்ந்து 60 மணி நேரங்களுக்கு மேல் சோதனை மேற்கொண்டு நாங்கள் பல ஆதாரங்களை திரட்டி உள்ள நிலையில், இதை சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும் என கூறுவது ஏற்புடையது அல்ல என்றும், மேலும் பல ஆதாரங்களை நீதிமன்றத்திலையும் அமலாக்க துறை தரப்பில் சமர்ப்பித்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து நீதிபதிகள் ஊழலுக்கு எதிராக அமலாக்க துறையினர் பல ஆதாரத்துடன் நிரூபிக்கிறதாக தெரிவித்துள்ளார்கள். அப்படி இருக்கையில் இதை விசாரிக்க கூடாது, சட்டவிரோதமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவிப்பது, தமிழக அரசு துறையில் ஊழல் நடந்தால் விசாரிக்கவே கூடாது என்று எண்ணுகிறதா.? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள்.

இந்த ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை பல ஆதாரங்களை கையில் வைத்து பல கோடி ஊழல் நடந்திருப்பதாக தெரிவிக்கிறார்கள், இதற்கு உங்கள் விளக்கம் என்ன என்று நீதிபதிகள் கேட்க, உடனே தமிழக அரசு எங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர், உடனே நீதி நீதிபதிகள் வரும் ஏப்ரல் 8 மற்றும் 9ஆம் தேதிக்குள் தமிழக அரசு தரப்பில் அமலாக்கத்துறை எதிராக என்ன விளக்கம் கொடுக்க வேண்டுமோ அல்லது வாதம் செய்ய வேண்டுமோ செய்து விட வேண்டும்.

இதற்கு பின்பு அமலாக்க துறையினர் இந்த வழக்கை சுதந்திரமாக விசாரணை நடத்துவதற்கு எந்த தடையும் இருக்கக் கூடாது என்றும் தெரிவித்திருக்கிறார்கள் நீதிபதிகள். இந்த நிலையில் இந்த டாஸ்மாக் தொடர்பான சோதனையை அமலாக்கத் துறை விசாரணை நடத்த விடாமல் காலதாமதம் செய்வது எப்படி என்று திமுக போட்ட திட்டம் தகடு பொடி ஆகும் வகையில் இந்த வழக்கு அமலாக்கத்துறைக்கு சாதகமாக மாறி உள்ளது.

குறிப்பாக அடுத்து அமலாக்க துறையை இந்த விசாரணையை நடத்த விடாமல் தடுத்து நிறுத்து என்பது திமுக தரப்பில் ஆலோசனை ஒரு பக்கம் நடந்து வருவதாக கூறப்பட்ட நிலையில், வரும் ஏப்ரல் 8, 9 தேதியுடன் இந்த வழக்கு முடிவுக்கு வரப்பட்டு அதன் பின்பு அமலாக்கத்துறைக்கு முழு அதிகாரத்தை நீதிமன்றம் கொடுக்கும் என்றும்,

இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையினர் ஏற்கனவே யார் யாருக்கு சம்மன் அனுப்பி, உடனே யார் யாரை கைது செய்ய வேண்டும் என்று பட்டியலை தயார் செய்து வைத்த நிலையில், சமீபத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை சட்டவிரோதமாக அறிவிக்க வேண்டும் என்று திமுக அரசு நீதிமன்றத்தை நாடியது, மேலும் அமலாக்க துறையை கோபப்படுத்தியதாகவும் அந்த வகையில், ஏப்ரல் இறுதிக்குள் செந்தில் பாலாஜியை கைது செய்து திமுக அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று அமலாக்கத்துறை தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here