இரண்டு நாள் பயணமாக மதுரை வருகிறார் ஜே.பி.நட்டா.! தமிழக முதல்வர் நேரில் சந்திப்பாரா.?கூட்டணி உறுதி செய்யப்படுமா.?

0
Follow on Google News

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வருகிறது, திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற்றப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி வரும் ஜனவரி 30,31 தேதிகளில் மதுரை வரும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருவதையெட்டி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் ஆகியோர் நேரில் சந்தித்து கூட்டணி குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

வரும் ஜனவரி 30ம் தேதி மதுரை வரும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இரண்டு நாட்கள் மதுரையில் தங்கி வரும் சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளார், இதற்காக தமிழக்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சி தலைவர், பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த தலைவர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து பேசுகிறார், பிப்ரவரி மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கபடும் நிலையில் அதற்கு முன்பே அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்வதற்கான பயணமாக ஜே.பி.நட்டா பயணம் இருக்கமா என அரசியல் விமர்சகர்கள் உற்றுநோக்கி உள்ளனர்.

மதுரை வேலம்மாள் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கெஸ்ட் ஹவுசில் இரண்டு நாட்கள் தங்கும் ஜே.பி.நட்டா, அங்கே அருகில் உள்ள பிரமாண்ட ஆடிட்டோரியத்தில் தமிழகம் முழுவதும் உள்ள சமுதாய தலைவர்கள் சந்திப்பு, தமிழகம் முழுவதும் பாஜக தேர்தல் பொறுப்பாளர் சந்திப்பு என இரண்டு நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஜே.பி.நட்டா தங்கியிருக்கும் கெஸ்ட் ஹவுஸ் அருகில் இருக்கும் ஆடிட்டோரியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பிரமாண்ட பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இந்த பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் ஜே.பி.நட்டா பேசுகிறார், இதற்கான ஆய்வுகளை நேற்று தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் CT ரவி மதுரைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார், மேலும் சில முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் சமுதாய தலைவர்களை தான் தங்கியிருக்கும் கெஸ்ட் ஹவுசில் தனியாக சந்தித்து பேசுகிறார் ஜே.பி.நட்டா.

சில தினங்களுக்கு முன் டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார், அப்போது கூட்டணி குறித்து சில சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, இதன் தொடர்ச்சியாக தேர்தல் அறிவிப்புக்கு முன்பே கூட்டணியை உறுதி செய்யப்பட்டு, தொடரும் கூட்டணி குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா ஜே.பி.நட்டா மதுரை பயணம் என்பது அரசியல் வல்லுனர்களின் எதிர்பார்ப்பாக அமைத்துள்ளது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .