உன் மூஞ்சிய பாத்து உன் புருஷன் சொன்ன டயலாக் தானே இது? பெண் பத்திரிகையாளரை வெளுத்து வாங்கும் ரஜினி ரசிகர்கள்.!

0
Follow on Google News

பெண் பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியம், இவர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் கன்னத்தை செல்லமாக தட்டியதை வைத்து சுய விளம்பரம் தேடி பிரபலம் அடைந்தார் என கூறப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பத்திரிகையாளர் சந்திப்பின் போது, தன்னிடம் கேள்வி எழுப்பிய பெண் நிருபர் லட்சுமியை பாராட்டும் விதத்தில் அந்த பெண் நிருபரை கன்னத்தில் செல்லமாக தட்டி பாராட்டினார்.

இந்த சம்பவத்தை தன்னை பிரபல படுத்தி கொள்வதற்காக ஆளுநரை தவறாக சித்தரித்தார் அந்த பெண் நிருபர் என கூறப்பட்டது. இது தொடர்பாக அந்தப் பெண் நிருபர், சமூக வலைதளத்தில், ஆளுநரின் செய்தியாளர் சந்திப்பு நிறைவடையும் நிலையில், நான் அவரிடம் ஒரு கேள்வியை எழுப்பினேன். அந்தக் கேள்விக்குப் பதிலாக, எனது அனுமதியின்றியே அவர் கன்னத்தில் தட்டினார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பலமுறை எனது முகத்தைக் கழுவியும் அதிலிருந்து என்னால் வெளியில் வர முடியவில்லை.

கோபமும் ஆதங்கமும் எனக்கு ஏற்பட்டது. ஆளுநர் அவர்களே தாத்தா என்கிற முறையில் எனக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் முறையில் நீங்கள் இதைச் செய்திருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை நீங்கள் செய்தது தவறு!” என்று ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் ஆளுநர் விவகாரத்தில் தன்னை பிரபல படுத்தி கொண்ட பெண் பத்திரிகையாளர் லட்சுமி அதன் பின் பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களில் தன்னை நடுநிலை பத்திரிகையாளராக காட்டி கொண்டு பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து கடும் எதிர்ப்புக்கு பின் அந்த சர்ச்சைக்குரிய பதிவை தனது டிவீட்டர் பக்கத்தில் இருந்து நீக்கினார். மேலும் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், பாஜக போன்ற காட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து வரும் லட்சுமி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார், ஆனால் தன்னை ஒரு நடுநிலை பத்திரிகையாளர் என தெரிவித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று மாலை சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு திரும்பினார், இந்நிலையில் தனது டிவீட்டர் பக்கத்தில் இப்டி சாவு பயத்தை காட்டிட்டாய்ங்களே பரமா என லட்சுமி பதிவு செய்துள்ளது ரஜினி ரசிகர்களை மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, இதற்கு ரஜினி ரசிகர்கள் உன் மூஞ்சிய பாத்து உன் புருஷன் சொன்ன டயலாக் தானே இது? என பதிலடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

என்னை மன்னிசிடுங்க ! விஜயகாந்தை நேரில் சந்தித்து கதறி அழுத வடிவேலு.! பிரேமலதா என்ன சொன்னார் தெரியுமா.?