மாரிதாஸ் பதிவு செய்தது 10. 13AM, FIR போட்டது 11.30AM, கைது 12.30மணி…..பரபரப்பை கிளப்பிய ரங்கராஜ் பாண்டே..!

0
Follow on Google News

பிரபல எழுத்தாளர் மரித்தாஸ் கைது குறித்து பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே பேசியதாவது, மாரிதாஸை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டியது தேவையா.? என்பதைப்பற்றி இதில் அரசியல் இருக்குமோ.? என்கின்ற கேள்வி எழுகிறது. இதில் புகார் கொடுத்தவர் திமுக ஐடி விங் மதுரை மண்டலத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் அவர் காலை 10 13 மணிக்கு மாரிதாஸ் பதிவுசெய்த ட்விட்டர் பதிவை பார்க்கின்றார்.

உடனே காவல் நிலையத்திற்கு தட தடவென ஓடிச்சென்று சைபர் கிரைமில் புகார் அளிக்கின்றார், 11:30க்கு எப்ஐஆர் பதிவு செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மதியம் 12:30 மணிக்கு கைது செய்ய மாரிதாஸ் வீட்டிற்கே காவல்துறை சென்று விட்டது. அப்படியானால் இரண்டு மணிநேரங்களில் தடதடவென விறுவிறுப்பாக இப்படி ஒரு வேலை நடந்து இருக்கின்றது என்றால் பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுமா.? இல்லையா.?

மேலும் இதில் சட்டவிரோதம் என்ன இருக்கின்றது என்பது புரியவில்லை. ஒரு ட்விட்டர் பதிவில் சட்டவிரோதமாக என்ன இருக்கின்றது என்பதை பதிவு செய்த அந்த ட்விட்டரை படித்துப் பார்த்தால் ஒன்றுமே புரியவில்லை. காஷ்மீர் பற்றியோ, பிரிவினை பற்றியோ பேசாத ஆளே கிடையாது. பிரதமர் மோடி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் காஷ்மீர் மற்றும் பிரிவினைவாதம் இந்த இரண்டு வார்த்தைகளை அனைவரும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இகாஷ்மீர் மற்றும் பிரிவினைவாதம் பற்றி பயன்படுத்தாத கிட்டதட்ட தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களே கிடையாது. ஆனால் அது குறித்து தான் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாரிதாஸ் மீது கொடுத்த புகாரில் என்ன இருக்கின்றது என்றால் ஆட்சிக்கு அவப்பெயர், பொது அமைதிக்கு பங்கம், மற்றும் அரசுக்கு எதிராக குற்றம் செய்யத் தூண்டும் விதம், இப்படி இந்த வார்த்தைகள் அனைத்தும் கோர்வையாக இருக்கும்போது நமக்கு என்ன தோன்றுகிறது.

எந்த வார்த்தைகளை புகாரில் தெரிவித்தால், எந்த பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்படலாம் என புகார் தெரிவித்தவரிடம் சொல்லப்பட்டிருக்கிறது. எஃப் ஐ ஆர் எழுதுவதற்கு ஒரு மணி நேரமாகும் புகாரை வாங்கி, அதை படித்துவிட்டு, அந்தப் புகாரின் அடிப்படையில் எந்தெந்த பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யலாம் என ஆராய்ந்து, அதன்பிறகு புகார் எழுதப்படும், புகார் தெரிவிப்பவர் வெள்ளை பேப்பரில் எழுதி கொடுப்பார் அந்த புகாரை பார்த்த பின்புதான் காவல்துறையினர் எப்ஐஆர் எழுதுவார்கள் ஆனால் சுமார் இரண்டு மணி நேரத்தில் இது அனைத்தும் நடந்தது பற்றி பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

டேய்…தம்பி சூர்யா ..இனி உன் படம் தியேட்டரில் ஓடாது… புரட்சி பேசும் நடிகர்கள்… மீடியா… பேடிகள் எங்கே.?