ரெம்டிஸ்வர் மருந்தை கொள்ளை லாபத்துக்கு விற்பனை செய்கிறதா தமிழக அரசு.? பரபரப்பு குற்றசாட்டு..!

0
Follow on Google News

கொரோனா மருந்தான ரெம்டிஸ்வர் மருந்து கள்ள சந்தைகளில் ஒரு வயால் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த ரெம்டிஸ்வர் மருந்தை நோயாளிகளுக்கு நேரடியாக அரசாங்கமே விற்பனை செய்ய முடிவு செய்து, சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் முதல் முதலில் விற்பனையை தொடங்கியது தமிழக அரசு.

ஆரம்ப கட்டத்தில் 6 வயால் அடங்கிய ரெம்டிஸ்வர் மருந்தை ரூ.9,800 க்கு விற்பனை செய்யப்பட்டது, இதனை தொடர்ந்து நோயாளிகளின் உறவினர்கள் மருந்து வாங்குவதற்காக சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் பெருமளவில் கூட்டம் கூடியதால், இவர்களை கட்டு படுத்துவதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது, இதனை தொடர்ந்து ஆன்லைன் மூலம் ரெம்டிஸ்வர் மருந்தை வாங்கிக்கொள்ள வழிவகை செய்தது அரசாங்கம்.

இதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தேவையான ரெம்டிஸ்வர் மருந்தை ஆன்லைனில் பதிவு செய்துவிட்டு அந்தந்த மாவட்டத்தில் உள்ள தலைமை மருத்துவ மையத்தில் கட்டணம் செலுத்தி ரெம்டிஸ்வர் மருந்தை வாங்கி கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது, இதனால் ஒரே இடத்தில் மக்கள் பெருமளவு கூட்டம் கூடுவது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் ஆன்லைனில் ரெம்டிஸ்வர் மருந்து விற்பனை தொடங்கி முதல் இரண்டு நாட்கள் மட்டும் ரெம்டிஸ்வர் மருந்தை ஒரு வயால் ரூ.1500 க்கு தனியார் மருத்துவமனைக்கு விற்று வந்த அரசு தற்போது ரூ. 3000 க்கு விற்பனை செய்து வருவதாக பாஜக மாநில இளைஞரணி செயலாளர் டாக்டர் சங்கரபாண்டி குற்றம் சுமத்தியுள்ளார் மேலும் அவர் ரூ.1500/- தனியார் மருத்துவமனைக்கு விற்று வந்த அரசு தற்போது ரூ.3000 – க்கு விற்று கொள்ளை அடிப்பது நியாயமா? என கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.