வரியில்லா பட்ஜெட் போடுவார் என்று பார்த்தால் வரிக்கு மேல் வரி போடுவார் போல.! அச்சத்தில் தமிழக மக்கள்..

0
Follow on Google News

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பின்பு முதல்வர் முக ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற்ற நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மிக முக்கியதுவம் வைத்தவராக அறியப்பட்டார். இதற்கு காரணம் ஊடகங்கள் அவர்க்கு கொடுத்த பில்டப் தான் என்று கூறப்படுகிறது.ஒரு கட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை பின்னுக்கு தள்ளி முக்கிய செய்திகளில் இடம் பிடித்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

ஆனால் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியமால் கோவப்பட்டு பேசியது, எதிர்கட்சி தலைவர்களை அநாகரிகமாக விமர்சனம் செய்து நிதியமைச்சராக பொறுப்பேற்று குறுகிய காலத்தில் உச்சத்துக்கு போன அதே வேகத்தில் பொது தளத்தில் சரிந்து விழுந்தார். இந்நிலையில் நிதியமைச்சர் வரியில்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யும் அளவுக்கு திறமையானவர்கள் என திமுக உடன் பிறப்புகள் தம்பட்டம் அடித்து வந்த நிலையில் நேற்று வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டார் நிதி அமைச்சர்.

பூஜ்ய வரி என்பது ஏமாற்று வேலை என அவர் வெள்ளை அறிக்கையில் தெரிவித்திருப்பது, வரியில்லாமல் பட்ஜெட் போட முடியாது என தனக்காக சில்லறையை சிதற விட்ட திமுக உடன்பிறப்புகளுக்கு உணர்த்தியுள்ளார் என்றும் மேலும், ஒரு யூனிட் மின்சாரம் வாங்கி விநியோகிப்பதில் மின்வாரியத்துக்கு ரூ.2.36 இழப்பு ஏற்படுகிறது என்று பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருப்பது விரைவில் மின்சார கட்டணம் உயர்த்தப்படும் என மறைமுக தெரிவித்துள்ளார் என்று பார்க்க படுகிறது.

போக்குவரத்துத்துறை நிர்வாகத்தை உடனடியாக சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு கி.மீ.,க்கும் அரசு பேருந்துகளை இயக்க ரூ.59 நஷ்டம் ஏற்படுகிறது. என நிதியமைச்சர் தெரிவித்துள்ளது, பேருந்து கட்டணம் உயர்த்தப்படலாம் என்றும், மேலும் தமிழகத்தில் தலா ஒரு குடும்பத்துக்கும் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் பொது சந்தாக் கடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் பல ஆண்டுகளாக மோட்டார் வாகன வரி உயர்த்தப்படாமலேயே உள்ளது.

பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் மோட்டார் வாகன வரி குறைவாக உள்ளது. மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்திக்கு ஏற்ப வரியை வசூலிக்காமல் இருப்பது சமூக நீதிக்கு எதிரானது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருப்பது வரியில்லா பட்ஜெட் போடுவார் என்று பார்த்தால் வரிக்கு மேல் வரி போடுவார் என்கிற அச்சத்திலும் குழப்பத்திலும் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த தமிழக மக்கள் உள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.