திமுக அமைச்சர் பொன்முடி சமீபத்தில், சைவம் – வைணவம் குறித்து பேசிய பேச்சு மிக பெரிய சர்ச்சையாக வெடித்தது. குறிப்பாக பெரும்பான்மையாக இருக்க கூடிய இந்து மதத்தை இழிவாக பேசியது மட்டுமில்லாமல், பெண்களையும் இழிவாக பொன்முடி பேசிய பேச்சு தமிழக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி உள்ளது, இதனை தொடர்ந்து பொன்முடி வகித்து வந்த திமுக துணை பொதுச் செயலாளர் பதவியை பறித்தார் முதல்வர் முக ஸ்டாலின்.
இருந்தாலும் இந்த பிரச்சனை முடிவுக்கு வரவில்லை, நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், பொன்முடி மீது காவல் துறை எப் ஐ ஆர் பதிவு செய்ய போகிறதா, அல்லது தாமாக நீதிமன்றம் முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமா என கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிலையில் பொன்முடி மீதி எப் ஐ ஆர் பதிவு செய்தால், அவருடைய அமைச்சர் பதவிக்கு ஆபத்து வந்து விடும், பின்பு தனக்கு எதிராக திரும்பி விடுவார் பொன்முடி என்கிற முதல்வருக்கு இருக்கும் பயம் தான் இதுவரை பொன்முடி மீது எப் ஐ ஆர் பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் பொன்முடி விவகாரம் குறித்து தமிழகத்தில் இருக்கும் பாஜக மூத்த தலைவர் ஒருவர் டெல்லி பாஜக தலைமையை தொடர்பு கொண்டு பேசியவர், பொன்முடி மீதி லக்னோ, டெல்லி, உத்திரபிரதேசம், போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் வழக்கு பதிவு செய்து, வேறு மாநில காவல்துறை பொன்முடியை கைது செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது குறித்து டெல்லி பாஜக தலைமையிடம் பேசி இருக்கிறார் பாஜக மூத்த தலைவர் ஒருவர்.
இந்த நிலையில் ஒரு பக்கம் நீதிமன்றம், பொன்முடி மீது எப் ஐ ஆர் பதிவு செய்யவில்லை என்றால், நீதிமன்றம் தாமாக முன்வந்து பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கும் என திமுக அரசுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது, மறுப்பக்கம் பாஜக ஆளும் வேறு மாநிலத்தில் வழக்கு பதிவு செய்து பொன்முடியை கைது செய்யும் வேளையில் இறங்கியுள்ளது பாஜக, இந்த விவகாரத்தை எப்படி கையாள்வது தெரியாமல் என்று திக்குமுக்காடி நிற்கிறது திமுக அரசு.
இந்த நிலையில் எப்படியும் அமைச்சர் பொன்முடி குறிப்பிட்டு ஒரு பெரும்பான்மை மதத்தை இழிவு படுத்தும் விதத்திலும், குறிப்பாக பெண்களை இழிவு படுத்தும் விதத்தில் மேடையில் பேசிய வீடியோ ஆதாரம் இருப்பதால், அவர் மீது எப் ஐ ஆர் போடா வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது திமுக அரசு, அந்த வகையில் கண்டிப்பாக திமுக அரசு அமைச்சர் பொன்முடி மீது எப் ஐ ஆர் போடும் என்றே எதிர்பார்க்கபடுகிறது.
அப்படி அமைச்சர் பொன்முடி மீது எப் ஐ ஆர் போட்ட பின்பு தன்னுடைய ஆட்டத்தை தொடங்க தயாராக இருக்கிறார் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, அதாவது எப் ஐ ஆர் போடப்பட்ட ஒருவர் எப்படி அமைச்சராக தொடரலாம் என விளக்கம் கேட்டு தமிழக முதல்வருக்கு தமிழக ஆளுநர் தரப்பில் இருந்து கடிதம் அனுப்பப்படும் என்றும், இதனை தொடர்ந்து பொன்முடி மீது எப் ஐ ஆர் போட்டதும் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
அல்லது தமிழக ஆளுநர் எப் ஐ பதிவு செய்யப்பட்ட ஒரு அமைச்சரை , அவருடைய அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்யவும் வாய்ப்பு உள்ளது என்கிறது அரசியல் வட்டாரங்கள், அந்த வகையில் கிட்டத்தட்ட பொன்முடி அமைச்சர் பதவியை இழக்க அதிக வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. மேலும் கடந்த கலங்களில் சட்டசபையில் பாதியிலே ஆளுனர் வெளியேறிய போது, ஆளுநரை நோக்கி வெளியே போ என்று செய்கை காட்டுவது போன்று பொன்முடி நடந்து கொண்டதை ஆளுநர் மறந்திருக்க மாட்டார்.
அந்த வகையில் தற்பொழுது பொன்முடி மீது தமிழகத்தில் எப் ஐ ஆர் பதிவு செய்ய வேண்டும், அல்லது பாஜக ஆளும் மாநிலத்தில் அவர் மீது பாஜக தரப்பு எப் ஐ ஆர் பதிவு செய்யும், அதே போன்று பொன்முடி அவருடைய அமைச்சர் பத்வியை ராஜினாமா செய்யவேண்டும், அல்லது ஆளுநர் அவரை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வாய்ப்பு உள்ளது என்கிற உச்சகட்ட பரபரப்பு தமிழக அரசியலில் நிலவி வருகிறது.