விருதுநகர் தொகுதியில் இறுதி கட்டத்தில் பட்டைய கிளப்பும் பாஜக.! தேர்தல் களத்தில் தாக்கு பிடிக்க முடியாமல் திணறும் திமுக.!

0
Follow on Google News

தமிழக சட்டசபை தேர்தல் ஒட்டு பதிவுக்கான நாட்கள் நெருங்கி விட்ட நிலையில், இன்றுடன் பிரச்சாரம் முடிவடைகிறது, அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் செய்ய இன்றுடன் கடைசி தினம் என்பதால் வேட்பாளர்கள் மதிய உணவை கட் செய்துவிட்டு கூட பிரச்சாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர், இதில் விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான பாஜக மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் திமுகவை பின்னுக்கு தள்ளியுள்ளது பாஜக.

விருதுநகர் தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதும் மெத்தனமாக இருந்தது அங்கே போட்டியிடும் திமுக, ஆனால் வேட்பளார் பட்டியல் வெளியானதும் அந்த தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் அந்த தொகுதியில் முகாமிட்டு அங்கே உள்ள சமுதாய தலைவர்கள், தொழில் அதிபர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார், மேலும் ஒவொரு கிராமமாக பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.

அதே போன்று விருதுநகர் தொகுதியில் உள்ள அதிமுக ஒன்றிய மற்றும் கிளை செயலாளர்கள் என அனைவரும் அந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் தான் போட்டியிடுகிறார் என்கிற உணர்வுடன், பாஜக வேட்பாளர் பாண்டுரங்கனை ஆதரித்து தீவிரமாக தேர்தல் பணியை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் பாஜக வேட்பாளர் பாண்டுரங்கனுக்கு சொந்தமான தொழில் நிறுவனத்தில் அதே தொகுதியை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் வேலை செய்து வருவது கூடுதல் பலம்.

இந்நிலையில் அசால்ட்டாக பாஜகவை நினைத்த திமுகவுக்கு கடும் போட்டியை கொடுத்த பாஜக, அங்கே அந்த தொகுதியில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பார்வையாளராகவும் பொறுப்பாளராக அவ்வப்போது தேர்தல் பணிகளை ஆய்வு செய்து வருவது அந்த தொகுதியை சேர்த்த பாஜகவினரை பம்பரமாக சுற்ற வைத்துள்ளது. மேலும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் நச்சத்திர பேச்சாளர்கள் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் போன்றவை விருதுநகர் தொகுதியில் திமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக பட்டைய கிளப்பி வருவது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் கடந்த 2016 தேர்தலில் அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பளார் சீனிவாசன் மூவாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றவர், தொகுதிக்கு கடந்த ஐந்து வருடமாக ஆக்கப்பூர்வமாக ஏதும் செய்யவில்லை, கடந்த தேர்தலில் ஒட்டு கேட்க வந்தவர் இந்த தேர்தலுக்கு தான் மக்களை சந்திக்கின்றார் என்கிற குற்றசாட்டுகளை திமுக வேட்பாளர்கள் மீது அடுக்கிக்கொண்டே செல்கின்றனர் அந்த தொகுதி மக்கள்.

இதனை தொடர்ந்து திமுக வேட்பாளர் மீது உள்ள அதிருப்தி பாஜக மற்றும் அதிமுகவின் தேர்தல் களப்பணி, மக்கள் மத்தியில் பாஜக மற்றும் அதிமுக தலைவர்களின் அனல் பறந்த பிரச்சாரம் விருதுநகர் தொகுதியில் இறுதி கட்ட நிலவரத்தில் பாஜக முன் தாக்கு பிடிக்க முடியாமல் திமுக திணறி வருவதை அந்த தொகுதியில் காண முடிகிறது, இந்நிலையில் தொடக்கத்தில் அந்த தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ஸ்ரீநிவாசன், 1967 ம் ஆண்டு விருதுநகர் தொகுதியில் காமராஜரை தோற்கடித்த திமுகவை வீழ்த்தவே இங்கே பாஜக போட்டியிடுகிறது என சொன்னது போன்று திமுகவை அதிமுக கூட்டணி துணையுடன் பாஜக வீழ்த்தும் சூழலில் தான் விருதுநகர் தேர்தல் களம் உள்ளது.