கோவை தெற்கில் கமல்ஹாசன் – வானதி சீனிவாசன் இடையே கடும் போட்டியில் வெல்ல போவது யார்.? வெளியானது எக்ஸிட் போல் முடிவுகள்.

0

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முக்கிய தொகுதிகள் பட்டியலில் கோவை தெற்கு தொகுதி இடம்பெற்றுள்ளது, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இந்த தொகுதியில் போட்டியிடுவதால் ஸ்டார் தொகுதியாக இது பார்க்க படுகிறது, கடந்த 2016 சட்டசபை தேர்தலில் இதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு 21 சதவிகித வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தார் வானதி ஸ்ரீனிவாசன். திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் இரண்டாம் இடத்திலும், அதிமுக முதல் இடத்தை பிடித்திருந்தது.

இந்நிலையில் இம்முறை 2021 சட்டசபை தேர்தலில் மீண்டும் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக அந்த தொகுதியில் பணியாற்றி வந்தவர் வானதி ஸ்ரீநிவாசன், அதே போன்று அதிமுக சிட்டிங் எம் எல் ஏ அம்மன் அர்ஜுனன் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட முயற்சி செய்து வந்தார், இறுதியில் கடும் போராட்டத்துக்கு பின் கோவை தெற்கு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியது அதிமுக.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார் இந்த தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட உடன் காங்கிரஸ் – பாஜக இடையே இரண்டு முனை போட்டி நிலவியது, இதில் வானதி சீனிவாசன் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக அறியபட்டது, ஆனால் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானதும் மூன்று முனை போட்டியாக கோவை தெற்கு தொகுதி மாறியது.

மேலும் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் மேற்கொண்ட பிரச்சாரத்துக்கு பின்பு அவருக்கும், வானதி சீனிவாசன் இடையே கடுமையான போட்டி நிலவியது, இந்த போட்டியில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார், இந்நிலையில் நடந்த முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 2ம் தேதி வெளிவர இருக்கும் நிலையில் நேற்று வெளியான எக்ஸிட் போல் முடிவுகளில் கோவை தெற்கு தொகுதி பற்றிய கருத்துக்கணிப்பில்.

காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மயூரா ஜெயக்குமார் 26 சதவிகித வாக்குகள் வரை பெற்று மூன்றாவது இடத்தை பிடிப்பர் என்றும், கமல்ஹாசன் வானதி சீனிவாசன் இருவரும் சுமார் 36 சதவிகித வாக்குகள் வரை பெறுவார்கள் என கணிக்கப்பட்டு இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருவதாக கருத்து கணிப்புகள் கூறப்பட்டு வருகிறது, ஆனால் அதிமுக வாக்குகள் பெருமளவு வானதி சீனிவாசனுக்கு பதிவாகி இருக்கும் பட்சத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் வானதி சீனிவாசனுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.