ஸ்டாலின் அரசு காப்பாற்றினாலும் மோடி அரசு செந்தில்பாலாஜியை விடுவதாக இல்லை..! 2ஜி போன்று விஸ்வரூபம் எடுக்கும் 900 கோடி ஊழல்..!

0
Follow on Google News

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவிவகித்தவர் செந்தில்பாலாஜி. இவர் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. செந்தில்பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஆனால் செந்தில் பாலாஜி மீது மீண்டும் ஒரு மிக பெரிய ஊழல் குற்றசாட்டுகளுக்காக வழக்கு பதிவு செய்யும் வேலைகள் நடந்து வருகிறது.

2011-2016 ஆண்டுகளில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி, அப்போது அரசு பேருந்துகளில் விளம்பரம் செய்வதற்கான டெண்டர் எடுப்பதற்காக பல்வேறு விளம்பர கம்பெனிகள் பங்கு பெற்றது. இதில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த யுனி அட்வைசர் நிறுவனம், ஒரு பேருந்தில் விளம்பரம் செய்ய மதம் ரூபாய், 1010 என டெண்டர் கோரி விண்ணப்பம் செய்திருந்ததது.

யுனி அட்வைசர் நிறுவனத்தை ஆய்வு செய்த போக்குவரத்து துறை அதிகாரிகள், யுனி நிறுவனத்துக்கு முறையான முன் அனுபவம் இல்லை, என தெரிவித்து அந்த நிறுவனத்தை நிராகரித்து விட்டனர். இதன் பின்பு வேறு ஒரு நிறுவனத்துக்கு குறைந்த தொகையில் டெண்டர் விடப்பட்டதில், 5 வருடத்துக்கு தமிழக அரசுக்கு பேருந்து விளம்பரங்கள் மூலம் கிடைத்த லாபம் 86.86 கோடி மட்டுமே, ஆனால் யுனி நிறுவனம் ஒரு பேருந்தில் விளம்பரம் செய்ய மதம் ரூ.1010 என்கிற விதத்தில் அவர்களுக்கு டெண்டர் கொடுத்திருந்தால் தமிழக அரசுக்கு 5 வருடத்துக்கு ரூ. 1162 கோடி லாபம் கிடைத்திருக்கும் என CIG ரிப்போர்ட் தகவல் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து CIG அதிகாரிகள் மேற்கொணட ஆய்வில் யுனி அட்வைசர் நிறுவனம் கடந்த 1987ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருவதாகவும், ஆந்திர மாநில பேருந்துகளில் விளம்பரம் செய்வதர்க்கான டெண்டர்களை எடுத்து பல ஆண்டுகள் செயல்பட்டு வருகிறது, மேலும் ரயில்வே துறையிலும் விளம்பரம் செய்து வருவதாக CIG அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் யுனி நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கப்படாததால், சசுமார் 958 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக CIG ரிபோர்ட் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த மோசடி குற்றசாட்டு தொடர்பாக அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மற்றும் முக்கிய மத்திய அமைச்சர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் CIG ரிபோர்டின் படி எந்த நேரத்திலும் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யலாம் என்றும், முக ஸ்டாலின் தலைமையிலான அரசு செந்தில் பாலாஜியை காப்பாற்றினாலும், மோடி தலைமையிலான மத்திய அரசு செந்தில்பாலாஜியை விடாது என அரசியல் வட்டாரதத்தில் பேசப்பட்டு வருகிறது குறிப்பிடதக்கது.