தப்பு செய்து தனக்கு தானே அப்பு வைத்த எடப்பாடி… கட்சியும், சின்னத்தையும் கைப்பற்றும் ஓபிஎஸ்..

0
Follow on Google News

அதிமுகவில் ஓபிஎஸ் அணி மற்றும் இபிஎஸ் அணி என இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறார்கள், இதில் எடப்பாடி தலைமையிலான அணி தான் உண்மையான அதிமுக என அவர்கள் தரப்பில் தெரிவித்து வருகிறார்கள், அதே நிலையில் ஓபிஎஸ் தரப்பிலான அணிதான் உண்மையான அதிமுக என்று ஓபிஎஸ் தரப்பிலும் தெரிவித்து வருகிறார்கள். இவர்களின் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்பொழுது ஈரோடு இடைத்தேர்தல் அமைந்துள்ளது.

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையிலான மிக உச்சகட்ட மோதலில் எடப்பாடி தரப்பினர் மிக கடுமையாக ஓ பன்னீர்செல்வத்தை விமர்சனம் செய்து வந்தனர், ஆனால் ஈரோடு இடைத்தேர்தல் அறிவித்த பின்பு சற்று அடக்கி வாசிக்க தொடங்கியுள்ளார்கள். அதேபோன்று பாஜகவை எடப்பாடி நேரடியாக விமர்சனம் செய்யவில்லை என்றாலும் அவர் அணியில் அணியில் இடம் பெற்றவர்கள் பொது மேடைகளில் பாஜகவை விமர்சனம் செய்து வந்த நிலையில் தற்போது ஈரோடு இடைத்தேர்தல் அறிவித்த பின்பு சற்று அடக்கி வாசிக்கிறார்கள்.

இதன் பின்னணியில் எடப்பாடி பழனிச்சாமி மிக பெரிய சிக்கலில் சிக்கியுள்ளது தான் என்பது வெட்டம் வெளிச்சமாகி உள்ளது. அதிமுக விவகாரத்தில் பாஜக தரப்பு இரண்டு அணிகளையும் சம அளவில் தான் பார்த்து வருகிறார்கள். இதற்கு காரணம் இருவருமே தங்களுக்கு தாங்களே நாங்க தான் உண்மையான அதிமுக என்று தெரிவித்து வந்தாலும், தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் முடிவு செய்யட்டும் என அதிமுக விவகாரத்தில் பாஜக அமைதியாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்கிற பிரச்சனை உச்சத்தை அடைந்துள்ளது, அந்த வகையில் இரட்டை சின்னம் ஒதுக்கும் உரிமை அதிமுக சட்ட விதிகளின்படியம், இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிகளின்படியும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்து கையெழுத்துயிட்டால் மட்டுமே தேர்தலில் போட்டியிடுவதற்கான இரட்டை இலை சின்னம் கிடைக்கும்.

அதனடிப்படையில் தான் கடந்த சட்ட மன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிட்ட பொழுது கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவருமே கையொப்பமிட்டு சின்னத்தைப் பெற்று அதிமுகவின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்கான அனைத்து மனுவும் இந்திய தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று அதிமுக சட்ட விதிகளின்படி அக்கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள் அதிமுகவின் அமைப்பு ரீதியான தேர்தலை நடத்தலாம் என்பதை தேர்தல் ஆணையம், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இருவருக்கும் அதிகாரத்தை ஏற்கனவே கொடுத்திருந்தது, அதன் அடிப்படையில் இருவரும் கையப்பமிட்டு கிளை கழகம், நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட செயலாளர்கள் என தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்தனர்.

இந்த நிலையில் அதிமுக சட்டவிதிப்படியும், தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள அதிகாரத்தின்படியும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் கையொப்பமிட்டால் மட்டுமே இரட்டை இலை சின்னம் கிடைக்கும், ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தாமாகவே முன்வந்து அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் என்கின்ற பதவியை ராஜினாமா செய்து விட்டு அந்தப் பதவியை துறந்து விட்டார், மேலும் கட்சி விதிகளுக்கு அப்பாற்பட்டு தன்னை இணை பொதுச் செயலராக நியமித்து கொண்டதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், தற்பொழுது இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாக உள்ளதால், அதிமுக ஒருங்கிணைப்பாளருக்கு முழு அதிகாரமும் இருப்பதால், இரட்டை இலை சின்னம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தரப்புக்கு கிடைக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும், இதனால் அவசரப்பட்டு இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்து தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி என கூறப்படுகிறது.