ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு முதல்வராக இருந்த ஓ பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்து சசிகலா முதல்வர் பதவி ஏற்பதற்கு முன்பே சிறை செல்ல நேரிட்டது. அந்த சூழலில் தனக்கு நம்பிக்கையான ஒருவரை தற்காலிகமாக முதல்வராக அமர்த்தலாம் என சசிகலா முடிவு செய்து. எடப்பாடி பழனிசாமியை கை காட்டினார் சசிகலா. உடனே தவழ்ந்து சென்று சசிகலா காலில் விழுந்து முதல்வராக பொறுப்பேற்று கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி.
ஜெயலலிதா மறைவுக்கு பின்பு, எடப்பாடி முதல்வராக இருந்தாலும் கூட சசிகலா காலில் விழுந்து முதல்வரானவர் தானே என்பதால், பெரும்பாலான மக்கள் எடப்பாடியை ஒரு தலைவராக ஏற்று கொள்ளவில்லை. இதனால் திமுகவுக்கு எதிரான ஒரு ஆளுமை மிக்க தலைமை இல்லாமல் தமிழக அரசியல் களம் இருந்து வந்தது, மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தாலும் கூட தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக மிக கடுமையான அரசியலை முன்னெடுத்து செல்ல தமிழக பாஜகவை வழிநடத்திச் செல்ல சரியான தலைமை இல்லாமல் தமிழக பாஜக தடுமாறிக் கொண்டிருந்த காலம் அது,
அந்த வகையில் நடந்து முடிந்த நாடாளுமன்றம், சட்டமன்றம் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பாஜக, எடப்பாடி கொடுக்கும் தொகுதியில் வாங்கிக்கொண்டு போட்டியிட்டது, எடப்பாடியும் எந்த விதத்திலும் பாஜக வளர்ந்து விட கூடாது என்பதில் உறுதியாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் 2021 தமிழகத்தில் நடந்த ஆட்சி மாற்றத்துக்கு பின்பு பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின்பு தமிழக அரசியல் களம் தலைகீழாக மாறியது.
கடந்த அதிமுக ஆட்சியில் செய்த ஊழலில் இருந்து தப்பித்து கொள்ள ஆளும் திமுக அரசை விமர்சனம் செய்யாமல் மௌனமாக அதிமுக தரப்பு இருக்க. ஆளும் திமுக அரசுக்கு எதிராக துணிந்து தன்னுடைய அரசியலை முன்னெடுத்து அண்ணாமலை செயற்படுத்தி வந்தது, தமிழக மக்கள் மத்தியில் அறிவிக்கப்படாத எதிர்க்கட்சி தலைவராக பார்க்கப்பட்டார் அண்ணாமலை, மேலும் அண்ணாமலை வருகைக்கு பின்பு பாஜகவின் அசுர வளர்ச்சியின் காரணமாக தமிழக தேர்தல் காலம் திமுக – பாஜக என்று மாறியது.
வடிவேலு படத்தில் நானும் ரவுடி தான், அம்மா சாத்தியமா நானும் ரவுடி தான் என வரும் காமெடி காட்சி போன்று, நான் தான் எதிர்க்கட்சி தலைவர், என்ன போக்கஸ் பண்ணுக என்று எடப்பாடி தன்னை முன்னிலை படுத்தி கொள்ள முயற்சி செய்தாலும் யாரும் கண்டு கொள்வதாக இல்லை, இதனால் அண்ணாமலையின் வளர்ச்சி என்பது தன்னை அரசியலில் அட்ரஸ் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த எடப்பாடி, கடந்த சில மாதங்களாகவே அண்ணாமலைக்கு எதிராக பல வேலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் பொது வாழ்க்கையில் இருக்கும் பெண்களை இழிவாக பேசி சிறை சென்று வந்த சமூக வலை தள பிரபலம் ஒருவர் தலைமையின் கீழ் அண்ணாமலைக்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிவு செய்வது, இதற்கு முன்பு விஜயகாந்த் மிக பெரிய உச்சத்தில் இருந்த போது அவரை கேலி கிண்டல் செய்தது போன்று அண்ணாமலையை கேலி கிண்டல் செய்து அவரை டம்மி செய்வது, இப்படி தொடர்ந்து அண்ணாமலை மற்றும் பாஜகவுக்கு எதிராக சமூக வலைதளத்தில் சிறை சென்று வந்தவரின் தலைமையின் கீழ் ஒரு கும்பல் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த கும்பலிடம் இணைந்து செயல்பட சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் நபர்களிடம் தொடர்பு கொண்டு அண்ணாமலைக்கு எதிராக பதிவு செய்து எடப்பாடியை புகழ்த்து பதிவு செய்தால் பணம் கிடைக்கும் என ஆள் பிடிக்கும் வேலையும் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அண்ணாமலையின் வளர்ச்சியை பொறுத்து கொள்ள முடியாத எடப்பாடி பழனிச்சாமி அடிமட்டத்தில் இறங்கி அரசியல் செய்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.