நாங்க ஏமார்ந்தது போதும்,.. திருமாவுக்கு எதிராக திரளும் சிதம்பரம் தொகுதி மக்கள்… மிக பெரிய வாக்கு வித்தியசத்தில் திருமாவளவனை வீழ்த்தும் கார்த்தியானி..

0
Follow on Google News

கடந்த முறை மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தப்பித்தோம் பிழைத்தோம் என, தோல்வின் விழிப்புக்கு சென்று இறுதியில் கடும் இழுபறிக்கு பின்பு சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்ற திருமாவளவன் மீது அவர் சார்ந்த பட்டியல் சமூக மக்களே கடும் கோபத்தில் உள்ளனர், கடந்த முறை வெற்றி பெற்ற திருமவளவனிடம் பல கோரிக்கைகளை வைத்திருந்த சிதம்பரம் தொகுதி மக்கள், அதில் ஒன்றை கூட நிறைவேற்ற வில்லை என்கிற கோபத்தில் திருமாவளவனுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.

குறிப்பாக சிதம்பரம் தொகுதியில் பெரும்பாலும் முந்திரி உற்பத்தி அதிகமாக இருப்பதால், முந்திரி தொழிற்சாலையை கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில் கடந்த ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திருமாவளவன் ஏன் இந்த முயற்சியை எடுக்கவில்லை என கடும் கோபத்தில் இருக்கும் சிதம்பரம் தொகுதி மக்கள், இதுவரை செய்யாத நீங்கள் எங்களுக்கு இனிமேலா செய்யப் போகிறீர்கள் என திருமாவளன் மீது கடும் கோபத்தில் சிதம்பரம் தொகுதி மக்கள் இருப்பதை பார்க்க முடிகிறது.

மேலும் தடுப்பணைகள் கட்டி கொடுக்க வேண்டும் என்று திருமாவளவனிடம் கடந்த நாடாளுமன்ற தேர்தலிடம் கோரிக்கை வைத்தனர் சிதம்பரம் தொகுதி மக்கள், அதையும் அவர் செய்து தரவில்லை இப்படி மக்கள் முன்வைத்த எந்த ஒரு திட்டத்தையும் திருமாவளவன் செயல்படுத்தவில்லை என்கின்ற கோபம் அந்த சிதம்பரம் தொகுதி மக்கள்மத்தியில் உள்ள நிலையில், மத்தியில் ஆளுகின்ற பாஜக அரசுக்கு வாக்களித்தால் மட்டுமே நமது நீண்ட நாள் கோரிக்கையான முந்திரி தொழிற்சாலை இந்த பகுதிக்கு வந்து பலருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்ற நம்பிக்கையில் சிதம்பரம் தொகுதி மக்களின் பார்வை பாஜக வேட்பாளர் கார்த்தியானி பக்கம் திரும்பி உள்ளதை அந்த பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் பாஜக இதையெல்லாம் செயல்படுத்த விடவில்லை என்று ஒரு போலி பிம்பத்தை விடுதலை சிறுத்தை கட்சியினர் சிதம்பரம் தொகுதி மக்களிடம் கட்டியமைக்க அமைக்க முயற்சித்தாலும், இனி எங்களை ஏமாற்ற முடியாது, பாஜகவை குறை சொல்லியே எவ்வளவு நாளைக்கு எங்களை ஏமாற்றுவீர்கள், என தெளிவோடு இருக்கும் வசிதம்பரம் தொகுதி மக்கள் பாஜக வேட்பாளர் கார்த்தியானிக்கு வாக்களிக்கும் மனநிலைக்கு வந்து விட்டதை பார்க்க முடிகிறது.

அந்த வகையில் சிதம்பரம் தொகுதியில் பல வாக்குறுதிகளை நிறைவேற்றாத திருமாவளவன் மீது இருக்கும் மக்கள் மத்தியில் இருக்கும் கோபம், மேலும் பாஜக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு சிதம்பரம் தொகுதியில் இருக்கும் பெரும் வாக்கு வங்கி, இந்த முறை சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருப்பதை களத்தில் பார்க்க முடிகிறது.

மேலும் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்ட பல பகுதிகளில் அவருக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு குரல் எழுப்பியதை பல இடங்களில் பார்க்க முடிந்தது, திருமாவளவன் தன்னை பட்டியல் சமூகத்தின் தலைவனாக அடையாளம் காட்டிக் கொண்டாலும், சிதம்பரம் தொகுதியில் வசிக்கும் பட்டியல் சமூகத்தினர் திருமாவளனை நோக்கி அவர்கள் எழுப்பி வரும் கேள்விகளுக்கு அவரிடம் பதில் இருக்கா.? என்றால் மில்லியன் டாலர் கொஸ்டின் அது.

இப்படி திருமாவளவனுக்கு எதிராக கடும் எதிர்ப்பு சிதம்பரம் தொகுதியில் நிலவி வரும் நிலையில் பாஜக வேட்பாளர் கார்த்தியானிக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவு நிலைப்பாட்டையும் பார்க்க முடிகிறது, அந்த வகையில் இம்முறை சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனை கார்த்தியானி வீழ்த்துவர் என்கிறது கள நிலவரம்.