விஜய் – சங்கீதா பிரிந்து வாழ்வது உண்மை தான்… பல வருடம் கழித்து தனியாக இருப்பதை வெளிப்படுத்திய சங்கீதா…

0
Follow on Google News

நடிகர் விஜய் அரசியலில் தீவிரமாக களமிறங்கி தனது கட்சி பெயரான தமிழக வெற்றி கழகம் என்பதை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கும் விஜய், 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்க உள்ளார். இதற்கிடையில் கடந்த சில நாட்களாக விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை செய்திகளில் இருந்து வருகிறது. நடிகர் விஜயின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது பெற்றோர் மட்டும் அல்ல அவரின் மனைவி சங்கீதாவும் தான்.

ஒரு மருத்துவராக இருந்தும், விஜய்யை திருமணம் செய்து கொண்ட பின்னர்… குழந்தைகள் மற்றும் குடும்பத்தை இவர் கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டதால், விஜய் முழுமையாக நடிப்பில் கவனம் செலுத்தினார். இதுவே திருமணத்திற்கு பின்னர் விஜய் திரையுலகில் அடுத்த கட்டத்திற்கு வர மிக முக்கிய காரணமாகவும் அமைந்தது.

அதே போல் தன்னுடைய கணவரின் படவிழா, மற்றும் சில முக்கிய பிரபலங்களின் திருமண விசேஷங்களுக்கும் ஜோடியாக கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கும் சங்கீதா, கடந்த சில வருடங்களாகவே எந்த ஒரு நிகழ்ச்சியிலும், விஜய்யின் பட விழாக்களிலும் கலந்து கொள்ளவில்லை. மகள் திவ்யா ஷாஷாவின் படிப்பின் காரணமாக சங்கீதா லண்டனில் இருப்பதால், சென்னையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளமுடியவில்லை என கூறப்பட்டது.

ஆனால் விஜய் தன்னுடைய பட பிடிப்பு முடிந்ததும் வெளிநாடு செல்வது வழக்கமான ஒன்று. ஆனால் விஜய் கடந்த 2 வருடமாகவே குடும்பத்தை சந்திக்க என வெளிநாடு சென்றதாக தெரியவில்லை. அதே போல் விஜய் தன்னுடைய மகன் சஞ்சையுடனும் பேசுவது இல்லை என கூறப்பட்டது. ஏற்கனவே நடிகைகளுடன் நெருக்கம் இதனால் விஜய் குடும்பத்தில் பிரச்சினை என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய காரணம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது விஜய் சம்பாதித்த பணத்தை தற்போது அரசியலுக்கு செலவு செய்வது குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. அரசியலுக்கு சென்றுவிட்டால் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் போய் விடும். ஆனால் விஜய் அரசியலில் தீவிரமாகவே இருந்து வருவதால், மனைவி உடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்கள் விவாகரத்து செய்ய உள்ளதாக கூறப்பட்டது.

ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.பொதுவாக விஜய் நடிக்கும் படத்தின் அனைத்து ஆடியோ வெளியீட்டு விழாவிலும் கலந்து கொண்டு வந்த மனைவி சங்கீதா நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, லியோ படத்தின் வெற்றி விழா என எதிலும் கலந்து கொள்ளவில்லை.இந்நிலையில், பல ஆண்டுகளான எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தலைகாட்டாமல் இருந்த நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வெளியாகி உள்ளது.

திரைப்பிரபலங்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்து இருந்த நிலையில், சங்கீதா மட்டும் தனியாக திருமணத்தில் கலந்து கொண்டார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இருவரும் உண்மையில் பிரிந்துவிட்டார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர். விஜய் மனைவி நீண்ட இடைவெளிக்கு பின்பு தற்பொழுது சங்கர் வீட்டு திருமண நிகழ்வில் அதுவும் கணவர் விஜய் உடன் செல்லாமல் தனியாக கலந்து கொண்டுள்ளார். அந்த வகையில் நானும் என்னுடைய கணவர் விஜய்யும் பிரிந்து தான் வாழ்ந்து வருகிறோம், என பல மாதங்களாக நடந்த கிசு கிசுக்களுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் அமைத்துள்ளது இந்த நிகழ்வு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here